தென்மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்.. அடையாளம் தெரியாமல் மாறப்போகும் தாம்பரம்! ரயில்வே கலக்குதே!
சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பயணிகளுக்கு, தாம்பரம் என்பது மிக முக்கியமான முனையம். தாம்பரத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் விரைவாக செல்வதற்கு ஏற்ப, ரயில்வே போக்குவரத்து துறை அவ்வப்போது சில அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.713 கோடி மதிப்பிலான 4வது ரயில் பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது.
எழும்பூர் ரயில் நிலையம் வழியாக, தினந்தோறும் 1.5-2 லட்சம் பயணிகள் சென்னைக்கு வந்து செல்கின்றனர். தோராயமாக 30-40 விரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படுகிறது. இது தவிர பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இந்த ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆங்காங்கே நிற்கும் ரயில்கள்
இப்படி இருக்கையில், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழித்தடம் மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வந்ததிலிருந்து, புறநகர் மின்சார ரயிலின் தேவை அதிகரித்திருக்கிறது. ஆனால் போதுமான அளவுக்கு ரயில்கள் இயக்கப்படுவதில்லை என்று பயணிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மட்டுமல்லாது சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடுகிறது என்றும் விமர்சித்திருந்தனர்.
பயணிகள் சிரமம்
அதேபோல காலை நேரங்களில், குறிப்பாக 6-8 மணி வரை தென் மாவட்டங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்காக, புறநகர் மின்சார ரயில்கள் ஓரம் கட்டப்படுகின்றன. இதனால் காலையில் வேலைக்கு செல்ல சென்னைக்குள் நுழைபவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மாலை நேரங்களிலும் எழும்பூரிலிருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக, புறநகர் மின்சார ரயில்கள் ஓரம் கட்டப்படுவதால், பணி முடித்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்த வழித்தடத்தில் 4வது ரயில் பாதை வேண்டும் என்று தொடர்ந்து கோரப்பட்டு வருகிறது.
4வது ரயில் பாதை
இப்படி இருக்கையில்தான் இந்த வழித்தடத்தில் ரூ.713 கோடி மதிப்பில் 4வது ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன்படி அடுத்த மாதம் முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த பாதை மூலம் பயண நேரம் குறையும்.
சரக்கு ரயில்
அதேபோல தாம்பரம் தற்போது மூன்றாவது ரயில் முனையமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் 4வது ரயில் பாதை வந்தால், தாம்பரத்திலிருந்து அதிகப்படியான ரயில்களை இயக்க முடியும். அதேபோல சரக்கு ரயில் இயக்குவதற்கும் 4வது வழித்தடம் மிக முக்கியமானதாகும். இப்படி அனைத்து வகையிலும் 4வது ரயில் வழித்தடம் மிகுந்த பங்காற்றும் என்று சொல்லப்படுகிறது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications