பிரிந்து போன கணவர்.. தூக்கில் தொங்கிய நடிகை பத்மஜா.. துர்நாற்றத்தால் அதிர்ந்து போன போலீஸ்!
துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: பத்மஜா என்ற சினிமா நடிகை சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. வீட்டிற்குள் வந்த துர்நாற்றத்தினால் அதிர்ந்து போனார்கள் போலீசார்.. இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை திருவொற்றியூரில், காலடிப்பேட்டையில் வசித்து வந்தவர் பத்மஜா.. 23 வயதாகிறது... சினிமா துணை நடிகை.... இவர் வீட்டின் கதவு ரொம்ப நேரமாகியும் திறக்கப்படவே இல்லை.
அதனால் சந்தேகம் அடைந்த ஹவுஸ் ஓனர், திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவும் அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள்.. அப்போதுதான பத்மஜா, ஃபேனில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போஸ்ட் மார்ட்டம்
உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பத்மஜா பற்றி அக்கம் பக்கத்தினரிடமும் விசாரித்துள்ளனர். துணை நடிகையாக இருப்பதாக, அந்த பகுதி மக்களிடம் பத்மஜா சொல்லி உள்ளார்.. 3 வருஷத்துக்கு முன்பு பத்மஜாவுக்கு திருமணமாகி உள்ளது... கணவன் பெயர் பவன் 25 என்றும் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் தெரிகிறது.

உறவினர் யார்?
ஆனால், பத்மஜாவுடன் ஏற்பட்ட தகராறில் பவன் 2 மாதத்திற்கு முன்பு ஆந்திராவுக்கு சென்றுவிட்டாராம். அதனால் குழந்தையை சொந்தக்காரர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு, பத்மஜா, திருவொற்றியூரில் வீடு வாடகைக்கு பார்த்து தனியாக வசித்து வந்துள்ளார்.. இந்த சமயத்தில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.. இதற்கு முழு காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்... இன்னொரு பக்கம் கல்யாணம் ஆகி 3 வருஷமே ஆவதால், ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.

வீடியோ
இதனிடையே பத்மஜா பெங்களூருவில் உள்ள தன்னுடைய அக்காவுக்கு அழுதபடியே வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.. அநேகமாக அந்த வீடியோவில் தற்கொலைக்கான காரணம் ஏதாவது சொல்லி இருப்பாரா என்ற கோணத்திலும் போலீசார் அந்த வீடியோவையும் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்

இளைஞர் யார்?
ஆனால் இன்னொரு பக்கம் வேறு காரணம் சொல்லப்படுகிறது.. சில நாட்களுக்கு முன்பு பத்மஜாவுடன் அவரது சொந்தக்காரர் ஒருவர் அந்த வீட்டில் தங்கி இருந்திருக்கிறார்.. இதை ஹவுஸ் ஓனர் பலமுறை பார்த்து வீட்டை காலி செய்து விடுமாறும் இவர்களை சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால் பத்மஜா தற்கொலை செய்து கொண்ட பிறகு அந்த உறவினரை காணோம்.. அதனால் அவர் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

அதிர்ச்சி
அவர் யார், எதற்காக பத்மஜா தற்கொலை செய்து கொண்டார்? அந்த வீடியோவில் வேறு என்னேன்ன பேசியிருந்தார் என்ற கேள்விகளுக்கான பதில்களில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், சினிமா நடிகையின் இந்த தற்கொலையானது திருவொற்றியூர் பகுதியில் மட்டுமல்லாது தமிழ் திரைஉலகிற்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications