சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

cowin இணையதளத்தில் 2 நாளில் தமிழ் மொழி சேர்க்கப்படும்.. மத்திய அரசு உறுதி

Google Oneindia Tamil News

சென்னை: தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளம் செயல்படுகிறது. ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி மட்டும் இடம் பெறவில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கோவின் இணையதளத்தில் அடுத்த இரண்டு நாளில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் சூட்டை கிளப்பி உள்ளது. பொதுமக்கள் பலரும் உடனடியாக தமிழ் மொழியை கோவின் தளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக ஒரு சிங்கம் உயிரிழப்பு.. 8 சிங்கங்களுக்கு பாதிப்பு.. சென்னையில் பரபரப்பு..! கொரோனா தொற்று காரணமாக ஒரு சிங்கம் உயிரிழப்பு.. 8 சிங்கங்களுக்கு பாதிப்பு.. சென்னையில் பரபரப்பு..!

கொரோனா தடுப்பூசி பதிவு செய்வதற்கு மத்திய அரசு, கோவின் (cowin) என்ற இணையதளத்தை உருவாக்கியது,. இந்த தளத்தில் தான் தடுப்பூசி போடுவதற்கு 18 முதல் 44 வயது வரை உள்ள மக்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்னென்ன மொழிகள்

என்னென்ன மொழிகள்

ஆரம்பத்தில் கோவின் தளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது. இன்று புதிதாக மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடா மற்றும் ஒரியா உள்பட 9 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

11 மொழிகள் உள்ளது

11 மொழிகள் உள்ளது

அதாவது ஒட்டுமொத்தமாக இந்தி, ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் இணையதளம் செயல்படுகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் மக்கள் பேசும் மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி கோவின் தளத்தில் சேர்க்கப்படவில்லை. கோவின் தளத்தில் தமிழ் மொழியையும் மட்டும் காணவில்லை

வெங்கடேசன்

வெங்கடேசன்

கோவின் தளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை எம்பி வெங்கடேசன் எம்பி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

உடனே சேர்க்க வேண்டும்

உடனே சேர்க்க வேண்டும்

இதேபோல் பாமக நிறுவனர் ராமதாசும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமதாஸ் வெளியிட்ட பதிவில். கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாததுவருத்தமளிக்கிறது. கோவின் இணையதளத்தில் தமிழ் இல்லாததால் ஆங்கிலம் தெரியாதவர்களால் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. கோவின் தளத்தில் தமிழையும் சேர்க்க முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக தமிழில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

 மத்திய அரசு உறுதி

மத்திய அரசு உறுதி

கோவின் இணைய தளத்தில் தமிழையும் சேர்க்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது. இதுபற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு சுகாதாரத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் கோவின் இணையதளத்தில் அடுத்த இரண்டு நாளில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English summary
cowin's website, which registers corona vaccine in various languages including Telugu, Kannada and Hindi. But only Tamil, the world's oldest language, has been neglected. Many Tamil political party leaders and Tamil activists have condemned the central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X