தமாகா வேட்பாளர் பட்டியல்! ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர்- வேணுகோபால்! தூத்துக்குடிக்கு யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்து அதன் வேட்பாளர்கள் குறித்தும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். எந்தெந்த தொகுதிகள் என்பதை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil Maanila Congress contest in 3 lok sabha constituencies and its candidates are

தமிழக லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு அதிமுக, திமுக, பாஜக ஆகியவை தனித்தனியே கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. இதனால் இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. இவற்றிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவேன் என அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அது போல் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், அமமுக, பாமக உள்ளிட்டவை கூட்டணி அமைத்திருந்தன. ஓபிஎஸ் அணியும் கூட்டணி அமைப்பதாக சொன்ன நிலையில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடுவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான கூட்டணி பங்கீடு நிறைவடைந்ததாகவும் தமிழக பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அது போல் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது எந்தெந்த தொகுதிகள் என்பதை ஜி.கே. வாசனே அறிவிப்பார் என்றார்.

இந்த நிலையில் ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என தகவல்கள் வெளியாகியிருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு டெல்டா பகுதிகளில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் ஈரோடு , மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய 3 தொகுதிகளை ஜி.கே.வாசன் கேட்டதாக தெரிகிறது.

ஆனால் அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் ஜி.கே.வாசன் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தமாகா ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றும் அதில் ஈரோடு தொகுதிக்கு விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். மீதமுள்ள தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளர் பிறகு அறிவிக்கப்படுவார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+