Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயர்ந்து வரும் ஆக்டிவ் கேஸ்கள்.. தமிழகத்திற்கு நல்லதல்ல.. இன்றைய கொரோனா நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் செப்டம்பர் 24ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1733 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,631 பேர் ஒரே நாளில் மீண்டனர். பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதேபோல் தினமும ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1700 என்கிற நிலையில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துள்ளது என்றாலும், கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் மாறவில்லை. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 24ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,53,848 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,631 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,01,198 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு

தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் 24ம் தேதி மாலை நிலவரப்படி 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,454 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 17 ஆயிரத்திற்கு உயர்ந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணக்கை இரண்டு வாரம் முன்பு 16 ஆயிரம் ஆக இருந்த நிலையில் தற்போது 17,196 ஆக உயர்ந்துள்ளது. தினசரி இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயருவதால் சிக்கல் எழும் அபாயமும் உள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 210 பேரும், சென்னையில் 205 பேரும், ஈரோட்டில் 119 பேரும், திருப்பூரில் 98 பேரும், சேலத்தில் 78 பேரும், திருவள்ளூரில் 73 பேரும், தஞ்சாவூரில் 61 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் சென்னையில் அதிகமாக (2127) உள்ளது. கோவையில் மட்டும் அதிகமாக 2119 பேர் உள்ளனர். ஈரோட்டில் 1287 பேரும், செங்கல்பட்டில் 1178 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+