வெளியானது 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. எத்தனை பாஸ் மார்க்? முழு விபரம் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணைய தளங்களில் வெளியானது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. இரண்டு வாரம் நடந்த தேர்வுகள் ஏப்ரல் 20ம் தேதி முடிவு பெற்றது. மொத்தம் இந்த தேர்வை 9, 38, 291 மாணவ, மாணவியர் எழுதினர்.

2022-23 ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கியது. 3 வாரம் நடைபெற்ற இந்த தேர்வுகள் ஏப்ரல் 5ம் தேதி முடிவு பெற்றது.
7,73,688 பேர் 11ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 3,60, 908 மாணவர்கள், 4,12,779 மாணவிகள் அடக்கம்.
இந்த நிலையில் இன்று வெளியாகிறது 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியானது.
10 வகுப்பு தேர்ச்சி விவரங்கள்:
தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை: 9,14,320 மாணவியர்களின் எண்ணிக்கை :4,55,017
மாணவர்களின் எண்ணிக்கை :4,59,303
தேர்ச்சி பெற்றவர்கள்:8,35,614 (91.39%)
மாணவியர் 4,30,710 (94.66%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 4,04,904 (88.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்,

கடந்த மே-2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணாக்கர்கள் 9,12,620. தேர்ச்சி பெற்றோர் 8,21,994. தேர்ச்சி சதவிகிதம் 90.07%.
11ம் வகுப்பு முடிவுகள்
இதையடுத்து 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியானது. +1 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.37% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
+1ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோல் மாணவர்கள் பதிவு செய்துள்ள அவர்களின் பெற்றோர்களின் போன் எண்ணுக்கும் ரிசல்ட் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை கொடுத்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வெளியான +2 ரிசல்ட் : சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் மாணவ, மாணவியர் எடுத்த அதிக மதிப்பெண் உட்பட பல முக்கிய விவரங்கள் வெளியாகி வருகின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் பிடித்து உள்ளது.
அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது. 12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே-2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 23,957. இந்தாண்டு மார்ச் / ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை. 32,501 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3,49,697 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,05,753 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications