தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு - 836 பேருக்கு தொற்று உறுதி - 553 டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் மேலும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,60,562 ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 553 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,42,862 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: 800ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

    உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 12,05,05,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,66,866 பேர் மரணமடைந்துள்ளனர். 9,70,50,316 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் 1,13,85,339 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 1,58,762 பேர் மரணமடைந்துள்ளனர்.

    Tamil Nadu 836 people affected by the corona today - 553 people discharged

    நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,60,562 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 553 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,42,862 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 2 பேரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,551 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 5,149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னையில் இன்று ஒரே நாளில் 317 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,39,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,19,869 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 476 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,40,658 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 360 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

    தமிழகத்தில் இதுவரை 1,83,49,379 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 64,829 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 188. வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

    தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் விழிப்புணர்வுடன் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையை கடைபிடித்தால் இன்னொரு பொது முடக்கத்தை தவிர்க்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+