அதிக விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. வேளாண் பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் விவசாயம் செய்து அதிக மகசூல் காட்டும் முதல் 3 விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டுக்குள் அரசு பணிகளில் 40,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும், பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும், பெண்களின் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 1 சதவீதம் சலுகை, மகளிர் உரிமைத் தொகையில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பயன்பெறாதவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

நம்மாழ்வார் விருது
தொடர்ந்து இன்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில், வேளாண்மையில் அதிக உற்பத்திக்கும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
* மாநில அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்களில் அதிக உற்பத்தியை பெறும் முதல் மூன்று உழவர்களுக்கு பரிசளிக்க ரூ 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். உயிர்ம வேளாண்மையில் செயல்பட்டு, மற்ற விவசாயிகளையும் வேளாண்மையில் ஈடுபட செய்யும் விவசாயிகள் மூன்று பேருக்கு பாராட்டு சான்றிதழுடன் தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்
* நவீன வேளாண் கருவிகள் நவீன சாகுபடி தொழில் நுட்பங்களை கண்டறிந்து விவசாயம் செய்து அதிக மகசூல் காட்டும் முதல் 3 விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
* முதல் பரிசுத்தொகையாக ரூ2.50 லட்சமும், இரண்டாம் பரிசுத்தொகையாக ரூ.1.50 லட்சமும், மூன்றாம் பரிசுத்தொகையாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.
* மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், 'மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படும்.
* ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள 40-50 சதவீதம் மானியத்தில் இருந்து 60-70 சதவீதமாக கூடுதல் மானியம் வழங்கப்படும்.
* மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் 79,000 உழவர்கள் பயனடையும் வகையில் ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 9,36,000 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 269.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி
* நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் இயற்கை மரண இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கப்படும்.
* வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும்.
* 63,000 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன் பெறும் வகையில் 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்.
* சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 இலட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications