தவெக மாநாடும், திமுகவின் அரசியலும்.. விஜய்க்கு முழு ஆதரவு கொடுக்கும் பாஜக
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம், விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான அனைத்துப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் அனைத்து கண்களும் விஜய் மாநாட்டை நோக்கியே உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விஜய் ரசிகர்கள், அவரது கட்சி தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் முதல் அரசியல் மாநாட்டுக்கு வரும்படி நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து உணர்ச்சிப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப்போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படி சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப போற்றும் விதமாக கொண்டாடுவோம் நம் வெற்றி கொள்கை திருவிழாவை.
அத்திருவிழாவை கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும், மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இருகரங்களையும் விரித்தபடி, இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், தவெக மாநாட்டுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை விழுப்புரத்தில் நடக்கிறது.
இந்த மாநாட்டுக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல், தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்ய வேண்டும். ஊழல் கட்சிகளுக்கு, ஆட்சிகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை முதலில் வெளியிட்டார். நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பு வெளியிட்ட போதும், தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதும், முதலில் வரவேற்று விஜய் முடிவை வாழ்த்தி மகிழ்ந்தது தமிழக பாஜக தான்.
தமிழக மக்களுக்கும் ஒரு மாற்று அரசியல் வேண்டுமென்ற அடிப்படையில், விஜய் நிச்சயம் ஊழல் அரசியல் கட்சிகளை விரட்டி அடிப்பார். நடிகர் விஜய் தமிழக அரசியலில் மிக கவனமாக செயல்பட்டு வெற்றிப் படிகளில் ஏற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தவறான விமர்சனங்களை முன் வைத்தது போல், எதிர்காலத்தில் செயல்படாமல் மத்திய மாநில அரசின் திட்டங்களை ஆராய்ந்து மக்கள் நலனுக்கு உகந்த வழியில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
வாக்கு வங்கி அரசியலுக்காக இந்து மதத்தை இகழ்ந்தும், இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களை புகழ்ந்தும், சனாதன தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல், அறியாமல் புரியாமல், அரசியல் லாபத்துக்காக, விளம்பரத்துக்காக அவதூறு பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான அரசியலையும் விஜய் புறம் தள்ள வேண்டும்.
தமிழக வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் மகிழ்ச்சிக்கும் வலிமை சேர்க்கும் வகையில் நேர்மறை அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய அரசியல் பாதையை உருவாக்கி உலகம் போற்றும் முன்மாதிரி அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications