குழந்தையுடன் வந்த தம்பதி..அமெரிக்காவில் சட்டென போட்டோகிராபராக மாறிய அண்ணாமலை! பின்னணி
சென்னை: 2 வார பயணமாக அமெரிக்க சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு போட்டோகிராபராக மாறிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான படம் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இவர் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
தமிழகத்தை ஆட்சி செய்யும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து பேட்டிகள் அளித்ததோடு, ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தார்.

அமெரிக்கா சுற்றுப்பயணம்
இந்நிலையில் தான் அண்ணாமலை 2 வார பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். உயர்கல்வி தொடர்பாக அவர் அமெரிக்கா சென்றதாகவும், இது அவரது தனிப்பட்ட பயணம் எனவும் கூறப்பட்டது. அதேநேரத்தில் 'இரண்டு வார கட்சி பயணமாக அண்ணனும் நானும் அமெரிக்கா செல்கிறோம்' என பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் இந்த பயணம் என்பது அண்ணாமலையில் தனிப்பட்ட பயணமா அல்லது கட்சி சார்ந்த பயணமாக என்ற கேள்விகள் எழுந்தன.

அண்ணாமலை விளக்கம்
இதனால் அமெரிக்கா சென்ற அண்ணாமலை அரசியல் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபடலாம் என்ற தகவல்கள் வட்டமடிக்க துவங்கின. இதற்கு மத்தியில் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை, நான் எனது Fellowship படிப்பு காரணங்களுக்காக அமெரிக்கா புறப்படுகிறேன். 13ம் தேதி வரை அங்கு இருப்பேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போட்டோகிராபராக மாறிய அண்ணாமலை
தமிழகத்தில் இருந்து செப்டம்பர் 30ல் புறப்பட்ட அண்ணாமலை அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது ஒரு போட்டோ வேகமாக இணையதளத்தில் பரவி வருகிறது. அதில் குழந்தையுடன் தம்பதியை அண்ணாமலை செல்போனில் போட்டோ எடுக்கிறார். இதன்மூலம் அமெரிக்கா சென்ற அண்ணாமலை போட்டோகிராபராக மாறியதாக இணையதளத்தில் இந்த படம் பரப்ப்பப்பட்டு வருகிறது.

நடந்தது என்ன?
அதாவது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள முயர் வூட்ஸ் தேசிய நினைவுச்சின்னத்தை (muir woods natinal monument) அண்ணாமலை சென்றார். அப்போது அங்கிருந்த தம்பதி அவரை போட்டோ எடுத்து தரும்படி கோரிய நிலையில் அண்ணாமலை அவர்களை செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இந்த தம்பதியை போட்டோ எடுக்கும் படம் தான் தற்போது இணையதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தற்போது பாஜகவினர், ‛எளிமையான மனிதர்' உள்பட பல்வேறு விளக்கங்களுடன் படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications