முரண்டு பிடிக்கும் சீனியர்! சனி பெயர்ச்சிக்கு பிறகு வரும் துறை பெயர்ச்சி! உச்சகட்ட பரபரப்பில் திமுக!
சென்னை : அதிமுகவில் எப்படி ஒற்றை தலைமை விவகாரமோ அதுபோல தற்போது திமுகவில் அமைச்சரவை மாற்றம் குறித்தான எதிர்பார்ப்புகள் தீவிரமாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்பதால் உச்சகட்ட பரபரப்பில் இருக்கின்றனர் உடன்பிறப்புகள்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு நேரடியாக தேர்தலை சந்தித்து தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்தித்து முதல்வரானவர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக பல்வேறு சிக்கல்களையும் இடைஞ்சல்களையும் சந்தித்த திமுக சீனியர்கள் அமைச்சர் பதவியைப் பெற தீவிரம் காட்டினர். அதன்படி திமுக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது.

அமைச்சர் பதவி
பல சீனியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த துறைகள் கிடைக்காத நிலையில் ஜூனியர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது, அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சென்னை மா சுப்பிரமணியன், திருச்சியைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட சிலர் முதன்முறையாக அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். இதனால் பலர் அதிருப்தியில் இருந்தனர். குறிப்பாக துரைமுருகன் ஐ.பெரியசாமி உள்ளிட்ட சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளால் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இருந்த போதும் அதனை வெளிகாட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து ஆட்சி மற்றும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

உதயநிதி ஸ்டாலின்
இதற்கிடையே நடிகரும் தயாரிப்பாளரும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் பதவி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அமைச்சர் பதவி கொடுத்தால் வாரிசு கட்சி என்ற தேவையில்லாத விமர்சனத்தை சந்திக்க வேண்டிவரும் என்பதால் தற்போதைக்கு வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும் அதனை உதயநிதி ஏற்று கொண்டதாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்லாது பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் தமிழகம் முழுவதும் உதயநிதி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதற்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பேச்சுக்கள் தீவிரம்
அவரை அமைச்சராக வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. முதல் முறையாக அவர் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் அதனை வழி மொழிந்தனர். இதனை தொடர்ந்து கடந்தாண்டு இதே மாதத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போகிறார் என்ற பேச்சுக்கள் தீவிரமாக எழுந்தது. ஆனால் தற்போது வரை அவர் அமைச்சராகவில்லை.

எந்த துறை?
அதே நேரத்தில் போக்குவரத்து துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளில் மட்டும் மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து ஓராண்டு காலம் முடிந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் உதயநிதி எப்போது அமைச்சராவார் என்ற பேச்சுகள் எழுந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக மூத்த அமைச்சர்களும் கட்சி சீனியர்களும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். அவர் அமைச்சராக வேண்டும் ஒரு தொகுதிக்குள் அவருடைய திறமை அடங்கி விடக்கூடாது என மீண்டும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். ஒரு படி மேலாக துணை முதல்வர் பதவி கூட உதயநிதிக்கு பொருத்தம் தான் என கட்சியினர் கூறி வருகின்றனர்.

இரு நாட்களில் அறிவிப்பு
இதனால் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் இன்னும் சில நாட்களுக்குள் அது குறித்த அறிவிப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டால் அவர் தமிழகம் முழுவதும் ஆய்வு என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். இதனால் இளைஞர்கள் கூடுதலாக கட்சிக்கு வருவார்கள் என்பதால் அந்தத் துறையை அவருக்கு கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் முதல்வரிடம் இருக்கும் சில துறைகளும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படலாம் என்று தீவிரமான தகவல்கள் உலாவுகின்றன.

சீனியர்கள் மாற்றம்
அதுமட்டுமல்லாமல் கட்சிகள் இருக்கும் புது முகங்களுக்கும் அதிருப்தியில் இருக்கும் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கும் துறை மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவு துறைக்கு பதிலாக வருவாய் துறை ஒதுக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் ஏற்கனவே வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதற்கு உடன்படவில்லை எனவும் பெரிய கருப்பன் வகிக்கும் ஊரக வளர்ச்சி துறை ஐ பெரியசாமிக்கும் கூட்டுறவுத்துறை பெரிய கருப்பு நிறம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

உடன்பிறப்புகள் ஆர்வம்
இது மட்டுமல்லாமல் மனித வள மேலாண்மை துறை வனத்துறை ஆகிய துறைகளிலும் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்தான உறுதியான முடிவுகள் முதல்வர் ஒப்புதலோடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களிடையே இந்த பட்டியல் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதால் யாருக்கு என்ன துறை கிடைக்கும் என மிக தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர். உடன்பிறப்புகளும் மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்நோக்கி இருக்கின்றனர். எது எப்படியே சனிபெயர்ச்சிக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் துறைப் பெயர்ச்சி இருக்கும் என்பது மட்டும் உறுதி என்கின்றனர் திமுக சீனியர்கள்.
-
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.. மகளிருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம்












Click it and Unblock the Notifications