Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றமா? நிருபர்கள் கேட்ட கேள்வி! கருணாநிதி ஸ்டைலில் ஸ்டாலின் பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்றைய தினம் மாற்றம் நடைபெறுகிறதா என்ற கேள்வியை முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கருணாநிதி ஸ்டைலில் அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? வரும் 27ஆம் தேதி முதல்வர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள போவதால் இன்று அமைச்சரவையில் முக்கிய மாற்றம் ஏற்படும் என தகவல்கள் பரவின.

சென்னை சேப்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகிறதே என்றனர், அதற்கு ஸ்டாலின், எனக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லையே என்றார். மேலும் கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசின் விழா, அதை மாநில அரசு நடத்தியது என்று தெரிவித்தார்.

tamil nadu cabinet MK Stalin TN Politics

முதல்வர் ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு 17 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அமெரிக்கா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்புகிறார்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றம் கொண்டுவரப்படும் என கடந்த சில நாட்களாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மாற்றம் இன்று மாலை அறிவிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. மேலும் இன்று மாலை தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதிதாக பொறுப்பேற்றதும் மரியாதை நிமித்தமாக இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.

இதை வைத்து தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் என்றே பலர் முடிவு செய்துவிட்டனர். அதிலும் 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புதியவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அவரை துணை முதல்வராக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிந்தது. அமைச்சராக இருக்கும் மெய்யநாதன் அல்லது சி.வி.கணேசன் இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்படவுள்ளதாகவும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சரவை மாற்றம் என்ற தகவல் வருகிறதே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அப்படியா எனக்கு வரவில்லையே என்றார். எனவே இன்று தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அமைச்சர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டிருப்பர்.

கடந்த சில தினங்களுக்கு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மாற்றப்பட்டு அவருக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டார். இவர் முதல்வரின் தனிச் செயலாளராக இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+