இலங்கை ரோந்து படகு மோதி மாயமான மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில் கடலில் மூழ்கிக் காணாமல்போன ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 5 நாட்களாக நடக்கும் தேடுதல் பணியில் மீனவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தமிழ்நாடு முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகவே இருக்கிறது.

அதன்படி தான் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியது.
தமிழக மீனவர்கள் இதில் தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கிய நிலையில், மலைச்சாமி என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய மீனவர்கள் மீட்கப்பட்டனர். அதேநேரம் ராமச்சந்திரன் என்ற மீனவர் மாயமானார். அவரை தேடும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்தது.
முதல்வர் அறிவிப்பு: இருப்பினும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாயமான ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.
தேங்காய்பட்டினத்தில் மாற்றம் வருமா? மீனவரின் இறப்பு சான்றிதழை 3 மாதத்தில் தர வேண்டும்: விஜய் வசந்த்
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று மூக்கையா (வயது 54), முத்து முனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் இராமச்சந்திரன் (வயது 74) ஆகிய நால்வரும் 01.08.2024 அன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மற்றும் முத்து முனியாண்டி மற்றும் மூக்கையா ஆகியோர் இலங்கை கடற்படையினரால் 3.8.2024 அன்று ஒப்படைக்கப்பட்டனர்.
ரூ.10 லட்சம் நிதியுதவி: மேலும், மீன்பிடி விசைப்படகு மூழ்கியதில் காணாமல் போன ராமச்சந்திரன் (வயது 74) த/பெ.வேலுதேவர் என்பவரை இந்தியக் கடலோரக் காவல் படை கப்பல்கள் கடந்த ஐந்து நாட்களாகத் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இச்சம்பவத்தில் கடலில் மூழ்கிக் காணாமல் போன இராமச்சந்திரன் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவருடைய குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்! -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications