பாதிக்கப்படும் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிட்டால்.. முதல்வருக்கு குழந்தை உரிமைகள் அமைப்பு கடிதம்!
சென்னை : பாதிக்கப்படும் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடும் தனி நபர்கள், ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் இதுபோன்று இனி நிகழாமல் தடுக்க செயல்முறைகள் வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் பல ஊடகங்களின் செய்திகளில் வெளியிடப்பட்டன.

முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்
இந்தச் செயலை, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த ஜூலை 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தனது பள்ளி விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து விழுந்து இறந்த செய்தி கேட்டு அதிர்ந்தோம். மரணமடைந்த குழந்தையின் தாய், ஊடகங்களில் மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளும், அதைத் தொடர்ந்து பள்ளிக்கு எதிராக இந்தச் சம்பவத்திற்கும் இதற்கு முன் இதே பள்ளியில் நிகழ்ந்ததாக கூறப்படும் மற்ற சந்தேக மரணங்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கும் நீதி கேட்டு போராட்டங்கள் நடந்ததும், உச்சகட்டமாக அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி அந்தப் பள்ளி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமும் அனைவரும் அறிந்ததே.

குற்றவாளிகள்
இந்த வழக்கு இப்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இந்தச் சம்பவத்தில் உண்மை வெளிவரும் என்றும், குழந்தையின் இறப்பிற்கு காரணமான குற்றவாளிகள் கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம். குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து இயங்கி வரும் கள செயல்பாட்டாளர்களின் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி உரிமைகளை உறுதி செய்யவும் உழைத்து வருகிறது.

பின்னோக்கி தள்ளி விடுமோ
இந்தச் சூழலில், இதுபோன்ற சம்பவங்கள் கல்வி மீதும் பள்ளியின் மீதும் அதிருப்தியை உருவாக்கி பெண் கல்வியில் சமூக நீதியை உயர்த்தி பிடித்து தமிழ்நாடு உருவாக்கி இருக்கும் முன்னேற்றத்தை பின்னோக்கி தள்ளி விடுமோ என அஞ்சுகிறோம். குழந்தைகளின் மகிழ்ச்சியான கல்வி உரிமையை பாகுபாடின்றி அனைவருக்கும் உறுதி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தங்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு எங்களின் ஆலோசனைகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
Recommended Video

அடையாளங்களை வெளியிடுவது குற்றம்
குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்களில் அவர்களின் அடையாளங்களை வெளியிடுவது குழந்தைகளின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. பாதிக்கப்படும் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவதை சட்டப்படி தடுக்கும் வகையிலும் அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து அதனை மீறும் தனி நபர்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications