தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது..' ஆசிய செஸ் கூட்டமைப்பு வழங்கியது
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதை பாராட்டும் வகையில், ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' விருது வழங்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை தமிழ்நாடு நடத்தியது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மொத்தம் 187 நாடுகளின் 1,400 வீரர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ இரண்டு வார காலமாக இந்த போட்டிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.
ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தையும், அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது. இந்தியாவின் 2-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் வென்றது. அதேபோல, பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றது. , ஜார்ஜியா அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்தியாவின் 1-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது.

தங்கப்பதக்கம் வென்ற அணிகளுக்கு கூடுதலாக கோப்பையும் வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. பங்கேற்க வந்த வெளிநாட்டு வீரர்கள் கூட தமிழகத்தின் விருந்தோம்பலை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் விருதை வழங்கினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
-
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications