“டயர்டாக இருந்தது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது.
கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முதலமைச்சருக்கு கொரோனா
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்." என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அரசு மற்றும் கட்சி சார்ந்த பணிகளில் ஓய்வின்றி ஈடுபட்டு வருகிறார். வெளிமாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம், அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் அடுத்தடுத்து கலந்துகொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஓய்வில் இருந்தார்.

வெளி மாவட்ட சுற்றுப்பயணம்
பின்னர் உடல் நலம்பெற்று அரசியல் பணிகளில் ஈடுபட்ட அவர் அடுத்தடுத்து கரூர், நாமக்கல் மாவட்டங்களுக்கும், அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி சார்ந்த நிகழ்வுகளிலும், அரசு விழாக்களிலும் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முக்கிய அரசு பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட்
இதனை தொடர்ந்து மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான விளம்பர படத்திலும் அவர் நடித்திருந்தார். இன்று காலை மாமல்லபுரம் சென்ற அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பணிகளை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications