முதல்வர் நிவாரண நிதிக்கு குவிந்த ரூ.. 399.93 கோடி... அள்ளிக் கொடுத்த வள்ளல்கள்!!
சென்னை: தமிழகத்தில், 2020 அக்டோபர் 7ஆம் தேதி வரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை ரூ.399.93 கோடி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு கொரோனா தொற்று காரணாமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான செலவை நன்கொடை மூலமும், அரசின் வருவாய் மூலமும் சரிகட்டி வருகிறது. முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை வழங்கி வந்துள்ளனர். இவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 2020, ஜூலை 21ஆம் தேதி வரை மொத்தம் 394.14 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வழங்கியவர்களின் விவரங்கள்:
* கலைஞர் நினைவு இண்டர்நேஷனல் வர்ச்சுவல் மாராத்தான் 2020, 23 லட்சத்து 41 ஆயிரத்து 726 ரூபாய்.
* நீதித்துறை பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் 49 லட்சத்து 56 ஆயிரத்து 851 ரூபாய்.
* இராம. ராமநாதன், சேர்மன், கும்பகோணம் மீயூட்சுவல் பெனிஃபிட் ஃபண்ட் நிதி லிமிடெட், கும்பகோணம் 25 லட்சம் ரூபாய்.
* தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் 1 கோடி ரூபாய்.
* கேஏஎல்எஸ் குருப் ஆப் கம்பெனிஸ், சென்னை 1 கோடி ரூபாய்.
* ஹிந்துஸ்தான் பேங்க் லிமிடட் 95 லட்சம் ரூபாய்.
* டெனோவா இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை 10 லட்சம் ரூபாய்.
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை மொத்தமாக 399.93 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி











Click it and Unblock the Notifications