துவரம் பருப்பு டெண்டரில் முறைகேடு இல்லை! பதறித் துடிக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்!
சென்னை: துவரம் பருப்பு கொள்முதல் மற்றும் டெண்டரில் எல்லாம் வெளிப்படைத் தன்மையாகவே நடப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி யூகத்தின் அடிப்படையில் அடிப்படை ஆதாரமற்றது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நுகர்பொருள் வாணிப கழகம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒவ்வொரு மாதமும் கொள்முதல் செய்யப்பட்டு பொது விநியோக அங்காடிகளின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 2022 மாதத்திற்கு தேவையான துவரம் பருப்பினை கொள்முதல் செய்வதற்கு இ ஒப்பந்தப்புள்ளி மூலம் 20,000 மெ.டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டு, அதற்கான விளம்பர அறிக்கை கடந்த 17.10.2022 அன்று வெளியிடப்பட்டது.

துவரம் பருப்பு டெண்டர்
நவம்பர் மாத கொள்முதலுக்காக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டியிருந்த துவரம் பருப்பு தர நிர்ணயங்களுடன் (Specification) கூடுதலாக கீழ்க்காணும் அளவு மற்றும் விவரங்களுடன் துவரம் பருப்புகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ) - துவரம் பருப்பு உடைக்கப்பட்டு தவிடு நீக்கப்பட்டு பட்கா ரகம் (உள்நாட்டு துவரம்பருப்பு), (ஆ) தானிய அளவு : 4 மில்லிமீட்டர் முதல் 6 மில்லிமீட்டர் வரை இருக்க வேண்டும். (இ) சல்லடை ஆய்வு: துவரம் பருப்பு 6 மில்லி மீட்டர் உள்ள சல்லடையில் 90 சதவீதம் வரை கடத்தப்படவேண்டும் மற்றும் 4 மில்லி மீட்டர் உள்ள சல்லடையில் 100சதவீதம் தங்க வேண்டும்.

விலைப்பட்டியல்
மேற்குறிப்பிட்டவாறு பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 25.10.2022 அன்று திறக்கப்பட்டன. அதில் துவரம் பருப்பு வழங்க 12 நிறுவனங்களும் கனடா மஞ்சள் பருப்பு வழங்க ஒரு நிறுவனமும் பங்கேற்றன. இந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000-ன்படி முறையாக ஆய்வு செய்து, தகுதி பெற்ற ஒப்பந்தப்புள்ளி வழங்கியவர்களின் விலைப்புள்ளிகள் 28.10.2022 அன்று திறக்கப்பட்டதில், துவரம் பருப்புக்கு குறைந்த விலைப்புள்ளியாக கிலோ ஒன்றுக்கு ரூ.107.439 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.107.43927 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.108.959 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.109.90 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.111.111 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.111.789 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.112.87 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.114.00 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.118.007 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.120.007 ஆகவும், அதற்கடுத்ததாக ரூ.123.00 ஆகவும் இருந்தது. கனடா மஞ்சள் பருப்புக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.118.007 ஆகவும் இருந்தது.

பேச்சுவார்த்தை
29.10.2022 அன்று துணைக் குழுமக் குழுவினரால் (Board Sub Committee) நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில், துவரம் பருப்புக்கு குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனம், கிலோ ஒன்றுக்கு ரூ.107.434 க்கு விலைக் குறைப்பு செய்ததன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கும் அதே விலையில் துவரம் பருப்பு வழங்க ஒப்புதல் தெரிவித்த பிற ஆறு நிறுவனங்களில் ஒப்பந்தப் புள்ளிச் சட்ட விதிமுறைகளின்படி வரிசைக்கிரமப்படி நான்கு நிறுவனங்களுக்கும் கொள்முதல் ஆணைகள் 29.10.2022 அன்று வழங்கப்பட்டுள்ளன.

வெளிப்படைத் தன்மை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கொள்முதலின் போதும் வெளிப்படைத் தன்மையுடன் இ டெண்டர் முறையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அவற்றில் பங்கேற்கும் நிறுவனத்திடம் பருப்பு மாதிரிகள் பெறப்பட்டு NABL அங்கீகாரம் உள்ள
ஆய்வகத்திற்கு மாதிரியினை அனுப்பி, அவற்றிலிருந்து பெறப்படும் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளின் அடிப்படையில் விலை இறுதி செய்யப்பட்டுத் தகுதியான நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

துவரம் பருப்பு சப்ளை
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு சப்ளை செய்யவே குறைந்த விலைப்புள்ளி வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும் மற்றும் அடிப்படை ஆதாரமற்றது. ஒரே தனியார் நிறுவனத்திற்கு மொத்த ஆர்டரும் கொடுத்தது தெரியக்கூடாது என்பதற்காக ஐந்து நிறுவனங்களுக்கு பிரித்து தரப்பட்டுள்ளது என்றும் அந்த ஒரு நிறுவனம் வழங்கும் வெளிநாட்டு இறக்குமதி பருப்பை வாங்கித்தான் மற்ற நான்கு நிறுவனங்களும் அரசுக்கு சப்ளை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது.

அடிப்படை ஆதாரமற்றது
இந்நிலையில் இரண்டு நாளிதழ்கள் 30.10.2022 தேதியிட்ட பதிப்பில் துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகள் உண்மைக்குப் புறம்பானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications