தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,000ஐ கடந்தது...இன்று மட்டும் 5088 பேருக்கு புதிதாக தொற்று!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 10,052 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் மாநிலம் முழுவதும் புதிதாக 5088 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 68 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மேலும் 1295 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 6,40,943 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 44,437 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5718 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tamil Nadu Corona updates: death has touched 10,052

நேற்று 45,135 பேர் தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இன்று 44,437 பேராக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 78,11,397 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 85,435 பேருக்கு இன்று மட்டும் கொரோன பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்து கோவையில் இன்று 448 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டில் 363 பேருக்கும், சேலத்தில் 362 பேருக்கும், தஞ்சாவூரில் 239 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 137 பேருக்கும், நாமக்கல்லில் 147 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 16 பேரும், வேலூரில் 7 பேரும், தஞ்சாவூரில் 5 பேரும், கிருஷ்ணகிரி, கடலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தலா மூவரும் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+