நல்லதொரு மாற்றம்.. கொரோனாவில் இருந்து மீளும் தமிழகம்.. இன்றைய அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 3,057 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,03,250 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 32,960 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இந்த மாத தொடக்கத்தில் 5500 என்கிற அளவில் இருந்த நிலையில் தற்போது 3500க்கு கீழ் குறைந்துவிட்டது. இன்று அதிலும் குறைவாக 3000 என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 32 ஆயிரம் என்கிற அளவில் உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை., செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருவள்ளூர். திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மிக குறைவாகவே உள்ளது.

மொத்த எண்ணிக்கை

மொத்த எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 3,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,03,250 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் எவ்வளவு

டிஸ்சார்ஜ் எவ்வளவு

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 4,262 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6,59,432 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1308 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 282 பேரும், கோவையில் 282 பேரும், சேலத்தில் 195 பேரும்,காஞ்சிபுரத்தில் 145 பேரும், கடலூரில் 139 பேரும் மீண்டுள்ளனர்.

இதுவரை எவ்வளவு மரணம்

இதுவரை எவ்வளவு மரணம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 33 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,858 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 11 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 3 பேரும், கோவை, திருவள்ளூர், திருப்பூரில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை அதிகம்

பரிசோதனை அதிகம்

தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது. இன்று மட்டும் 81,472 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 93,56,580 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 80,051 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 90,99,203 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 32,960 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

மாவட்ட பாதிப்பு

மாவட்ட பாதிப்பு

சென்னையில் குணம் அடைவோர் அதிகமாகவும் தொற்று பாதிப்பு குறைவாகவும் உள்ளது. 844 சென்னையில் இன்று ஒரே நாளில் 844 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 194139 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 10628 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 280 பேரும், செங்கல்பட்டில் 186 பேரும், சேலத்தில் 185 பேரும், திருவள்ளூரில் 168 பேரும், திருப்பூரில் 130 பேரும், ஈரோட்டில் 106 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+