எச்சரிக்கை.. சென்னையில் ஆயிரத்தை கடந்த கொரோனா! தமிழகத்தில் 2 ஆயிரத்தை தாண்டியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 1000யை கடந்துள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 2000தை கடந்துள்ளது.

இதனால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு

இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி மொத்தம் 2,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ஓமனில் இருந்தும், இன்னொருவர் அமெரிக்காவில் இருந்தும் வந்தவரும் அடங்குவர்.

12,158 பேருக்கு சிகிச்சை

12,158 பேருக்கு சிகிச்சை

அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று குணமாகி 1,321 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பலி எதுவும் இல்லை. இன்றைய பாதிப்போடு சேர்த்து தற்போது தமிழகத்தில் மொத்தம் 12,158 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கையும் அடங்கும். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது தான் காரணமாக உள்ளது.

சென்னையில் எவ்வளவு?

சென்னையில் எவ்வளவு?

இன்றைய பாதிப்பை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து 1025 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்த படியாக செங்கல்பட்டில் 369 பேரும், திருவள்ளூரில் 121 பேர், கோவையில் 118 பபேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை எவ்வளவு?

இதுவரை எவ்வளவு?

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 34 லட்சத்து 77 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 லட்சத்து 27 ஆயிரத்து 386 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 38 ஆயிரத்து 26 பேர் பலியாகி உள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+