முடிவே இல்லயா... தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! மக்களே உஷாரா இருங்க!
சென்னை: தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து இன்னும் கொரோனா வைரஸ் முற்றிலுமாக செல்லவில்லை. இதனால் தினசரி கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சில நாட்களாக மெல்ல அதிகரித்து வருகிறது.

இன்று பாதிப்பு எவ்வளவு?
அதாவது ஜூன் மாதம் துவக்கம் முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000யை கடந்துள்ளது. தொட்டுள்ளது. நேற்று 1,063 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் அமெரிக்காவில் இருந்தும், ஒருவர் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்தும் வந்தவர்கள் ஆவார்கள்.

5,921 பேருக்கு சிகிச்சை
கடந்த 2 மணிநேரத்தில் கொரோனா தொற்று குணமாகி 621 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பலி எதுவும் இல்லை. இன்றைய பாதிப்போடு சேர்த்து தற்போது தமிழகத்தில் மொத்தம் 5,912 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 5,174 ஆக இருந்தது.

சென்னையில் அதிகம்
இன்றைய பாதிப்பை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக சென்னையில் 616 பேர் பாதிக்கப்பட்டுள்னளர். இதற்கு அடுத்த டியாக செங்கல்பட்டில் 266 பேரும், கோவையில் 64 பேரும், கன்னியாகுமரியில் 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, திண்டுக்கல், அரியலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்று பூஜ்ஜியமாக இருந்தது. மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது.

இதுவரை எவ்வளவு?
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 34 லட்சத்து 65 ஆயிரத்து 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 லட்சத்து 21 ஆயிரத்து 552 பேர் குணமாகி உள்ளனர். மொத்தம் 38 ஆயிரத்து 26 பேர் பலியாகி உள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000யை தொட்டு வருவதால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். அலட்சியம் செய்யாமல் இருப்பதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றி விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications