இந்த 20 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா.. தமிழகத்தில் 800க்கு கீழ் சரிந்த தினசரி பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் நிலையில், இன்று மொத்தம் 20 மாவட்டங்களில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் வரும் நவ. 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகளாலும் பண்டிகை காலத்தாலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என முதலில் அஞ்சப்பட்டது. இருப்பினும் தீவிர கொரோனா வேக்சின் பணிகளால் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 775 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 27,17,978 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆகவே தொடர்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 36,336 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் சென்னையில் 3 பேரும் திருவாரூரில் 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
மாநிலம் முழுவதும் நேற்று 9,211 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 9,078ஆக மேலும் குறைந்துள்ளது. இன்றைய தினம் மாநிலத்தில் 896 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் மொத்தம் 26,72,564 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

மாவட்ட வாரியாக பாதிப்பு
அதிகபட்சமாகச் சென்னையில் 126 பேருக்கும் கோவையில் 112 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல அரியலூர் கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 10க்கும் குறைவான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாகத் தேனி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் சென்னை, கோவைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications