சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 3 நாட்களில் கொரோனா தொற்று கடுமையாக உயர்ந்த 8 மாவட்டங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும் கடந்த 3 நாட்களில் பாதிப்பு வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது. சில மாவட்டங்களில் பாதிப்பு இருமடங்காகி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 9 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ராமநாதபுரம், மதுரை, திருச்சி, நீலகிரி, தேனி, சேலம், கன்னியாகுமரி, தருமபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில் பாதிப்புகள் 40% மேல் அதிகரித்துள்ளது.

தமிழகத்திலேயே தேனியில் தான் கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பு மிகஅதிகபட்சமாக 85 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 21ம் தேதி கொரோனா பாதிப்பு தேனியில் 183 ஆக இருந்தது. 22ம் தேதி 36 பேருக்கு அதிகரித்து 236 ஆக உயர்ந்து இருந்தது- ஆனால் 23ம் தேதி 48 பேருக்கு அதிகரித்த கொரோனா 24ம் தேதி 81 பேருக்கு உயர்ந்தது. 25ம் தேதியான நேற்று 68 பேருக்கு தொற்று உயர்ந்தது. இதனால் தேனியில் பாதிப்புகளின் எண்ணிக்கை மூன்று நாட்களில் 85% அதிகரித்து 437 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுக்க 3 ஆறுதல் விஷயம் இருக்கு.. கொரோனா எண்ணிக்கையை பார்த்து பயம் தேவையில்லைதமிழகம் முழுக்க 3 ஆறுதல் விஷயம் இருக்கு.. கொரோனா எண்ணிக்கையை பார்த்து பயம் தேவையில்லை

பாதிப்பு எவ்வளவு

பாதிப்பு எவ்வளவு

தொற்று பாதிப்பு மிக குறைவாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று நீலகிரி. ஆனால் அந்த மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த பாதிப்பை விட மூன்று நாட்களில் 61% அதிகரித்துள்ளது. கடந்த 22ம் தேதி 37 பாதிக்கப்பட்டிருந்தனர். 25ம் தேதி 50 ஆக உயர்ந்துள்ளது.

இரு மடங்கு உயர்வு

இரு மடங்கு உயர்வு

மதுரையில் மூன்று நாட்களில் 430 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பாதிப்பு எண்ணிக்கை மதுரையில் 50% அதிகரித்துள்ளது. மதுரையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதான் மதுரையில் ஒரு நாளில் ஏற்பட்ட உச்சபட்ச கொரோனா பாதிப்பு ஆகும் கடந்த 21ம் தேதி 603 ஆக இருந்த பாதிப்புகள் இன்று 1279 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இரு மடங்கு உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

அதே போன்று ராமநாதபுரத்தில் கடந்த 3 நாட்களில் 157 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது 49.5% அளவுக்கு இந்த மூன்று நாளில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. 22ம் தேதி 317 ஆக இருந்த கொரோனா பாதிப்புகள் 25ம்தேதி மாலை நிலவரப்படி 475 ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் 22ம் தேதி 310 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 25ம் தேதி 461 ஆக உயர்ந்துள்ளது.

சேலம், குமரியில்

சேலம், குமரியில்

சேலத்தில் கொரோனா பாதிப்பு 22ம் தேதி 352 ஆக இருந்த நிலையில் 25ம் தேதி 494 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்த 3 நாட்களில் மட்டும் 142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி 22ம் தேதி 178 ஆக இருந்த நிலையில் 25ம்தேதி 255 ஆக உயர்ந்துள்ளது. தருமபுரியில் 22ம் தேதி 32 ஆக இருந்த நிலையில் 47 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 40 சதவீதம் அளவிற்கு பாதிப்புகள் உயர்ந்துள்ளன.

எத்தனை சதவீதம் உயர்வு

எத்தனை சதவீதம் உயர்வு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் அது 3 நாட்களில் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

  • அரியலூர் - 18 4.16%
  • செங்கல்பட்டு - 529. 13.66%
  • சென்னை- 4898. 11.45%
  • கோவை- 67. 23.92%
  • கடலூர்- 89. 10.81
  • தருமபுரி- 15. 46.87%
  • திண்டுக்கல்-65. 20.83
  • ஈரோடு-13. 15.66
  • கள்ளக்குறிச்சி-75. 18.98%
  • காஞ்சிபுரம்- 273. 22.46%
  • கன்னியாகுமரி-77. 43.25%
  • கரூர்-14. 11.76%
  • கிருஷ்ணகிரி-1. 1.38%
  • மதுரை-430. 50.64%
  • நாகப்பட்டினம்-15. 6.84%
  • நாமக்கல்-1. 1.12%
  • பெரம்பலூர்-16. 10.59%
  • புதுக்கோட்டை-16. 18.60%
  • ராமநாதபுரம்-157. 49.52%
  • ராணிப்பேட்டை-42. 8%
  • சேலம்- 142 40.34%
  • சிவகங்கை-32. 31.06%
  • தென்காசி 25. 9.57
  • தஞ்சாவூர்- 49. 15.90
  • தேனி-201 85.16%
  • நீலகிரி-19. 61.29%
  • திருவள்ளூர்-440. 16.63%
  • திருப்பூர் - 6. 4.91%
  • திருவாரூர்- 46. 19.91%
  • திருச்சி-151. 48.70%
  • திருநெல்வேலி-45. 6.98%
  • திருப்பத்தூர்-18. 21.68%
  • திருவண்ணாமலை-245. 20.43%
  • தூத்துக்குடி-117. 18.30%
  • வேலூர்-159. 32.38%
  • விழுப்புரம்-89. 14.68%
  • விருதுநகர்- 75. 36.05%

Recommended Video

    கொரோனாவை கட்டுப்படுத்துவது சவால்தான் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

    English summary
    tamil nadu district wise abstract of covid cases of june 25: In the last three days in Tamil Nadu, eight districts - Ramanathapuram, Madurai, Trichy, Nilgiris, Theni, Salem, Kanyakumari and Dharmapuri - have increased by 40%.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X