ரூல்ஸ் மாறுது.. உங்க செல்போனுக்கு "மெசேஜ்" வரப்போகுது.. மின்சார வாரியம் தந்த சர்ப்ரைஸ்.. இனி நிம்மதி
சென்னை: தமிழக மக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், மின்சார வாரியம் அடுத்த அதிரடியை அறிவித்திருக்கிறது. இது தொடர்பான குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் கோடை காலத்தில் மின்தடைகள் ஏற்படுவது இயல்பாகும்.. இதனால், இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்படும் பொதுமக்கள், நள்ளிரவு நேரங்களில் போராட்டங்களையும் நடத்துவார்கள்.

இந்த முறை கோடை காலத்தில் இப்படியான மின்தடைகள் ஆங்காங்கே ஏற்பட்டதையும், மக்கள் மின் அலுவலக வாயில்களில் போராட்டம் நடந்ததையும் மறுக்க முடியாது.
ஆனால், கடந்த காலங்களைவிட, இந்த முறை மின்தடைகள் பெரிதாக ஏற்படவில்லை என்கிறார்கள்.. காரணம், கோடையில் மின்தடை ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் முதலே மின்வாரியம் கையில் எடுத்திருந்தது. மின்சப்ளையில் பழுதுகள் ஏற்பட்டாலும், உடனடியாக சரி செய்வதற்காகவே, சிறப்பு குழுவும் அமைத்திருந்தது.
புதைவட கம்பிகள்: அதுமட்டுமல்ல, செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசியிருந்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் குப்தா "மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அடிக்கடி ஏற்படும் பழுதுகள் காரணமாக ஏற்படும் மின் தடைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றன.
இரவு நேரங்களில் மின் விநியோக பாதையிலுள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அடிக்கடி ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரி செய்யும் பொருட்டு, 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் பாதைகளில், சில இடையூறுகள் ஏற்படுவதால், இதையும் போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன" என்று கூறியிருந்தார்.
புகார் எண்: இந்நிலையில், மின் தடை, மின் மீட்டர் பழுது என எந்தவிதமான புகாராக இருந்தாலும், அதை மெசேஜ் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற செல்போன் எண்ணில், மின்தடை, மின் மீட்டர் பழுது என மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இங்கு அளிக்கப்படும் புகார்கள், கணினியில் பதிவு செய்யப்பட்டதுமே, மாவட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டுஅறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். பிறகு அங்கிருந்து சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலக உதவிப் பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டு, அதன்பிறகு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.
மெசேஜ்: ஆனால், இவ்வளவும் நடந்து முடிவதற்குள் தாமதம் ஏற்படுகிறது. அதனால்தான், புகார் மீது விரைவான விசாரணை எடுக்க வேண்டும் என்பதற்காக SMS வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மின்னகத்தில் புகார் செய்யப்பட்டதுமே, உதவிப் பொறியாளரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பும் வசதி தொடங்கப்பட்டுள்ளது...
அதாவது, பொதுமக்கள் புகார் அளிக்கும்போது, மின் இணைப்பு எண், பதிவு செய்த செல்போன் நம்பரை மின்னகத்தில் தெரிவிக்க வேண்டும்... இந்த அடிப்படையில், அந்த இணைப்புக்குரிய அலுவலக பொறியாளரின் செல்போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பப்படும். அவர் நடவடிக்கை எடுத்து, அந்த விவரத்தை சமர்பித்ததுமே, புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் நேரமும் மிச்சமாகும்.. நுகர்வோரின் புகாரும் எளிதில் தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications