பூரித்த சுப்ரியா சாஹூ ஐஏஎஸ்.. கலக்கிவரும் க்ரீன் தமிழ்நாடு மிஷன்.. பரவசத்தில் "பசுமை இயக்க பணிகள்"
சென்னை: மாநில அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தையும் பரவலாக ஈர்த்து வருகிறது.
பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதாவது, தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் 10 வருடங்களுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம், தமிழ்நாடு எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.. வெறும் மரக்கன்றுகளை மட்டுமே நட்டுவைக்காமல், அவைகளை வளர்த்தெடுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன்: இந்த கிரீன் தமிழ்நாடு மிஷன் (Green Tamil Nadu Mission) திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகர்புறங்களில் உள்ள வெப்பத்தின் தாக்கம் குறையும்.. பல்லுயிர் பெருக்கம் நிறைய நிகழும்.. ஆக்ஸிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும்.. காற்றில் உள்ள மாசு கட்டுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
இதற்காகவே, www.greentnmission.com என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டது. விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்த பசுமை தமிழ்நாடு மிஷன் திட்டத்தில், பள்ளி மாணவர்களையும் ஈடுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இதற்கான ஒரு அறிவிப்பை மாநில அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் அறிவித்திருந்தார்..
இதுதொடர்பாக ட்வீட் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.. அதில், "பசுமை தமிழ்நாடு மிஷன் திட்டம், மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனி அந்த திட்டத்தில் பள்ளி மாணவர்களையும் ஈடுபடுத்த வைப்பதே எங்களின் நோக்கமாக உள்ளது.. இதற்காக வன நர்சரிகளை (Forest nurseries) அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்க, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
வரவேற்பு: இது பள்ளி மாணவர்கள், அனைவரும் நர்சரிகளுக்கு நேரிலேயே சென்று, அங்குள்ள பலவகை தாவர இனங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.. மேலும், விதைப்பைகளை தயாரிக்கவும், மரக்கன்றுகளை நட்டுவைக்கவும், சிறப்பான சூழலை இது ஏற்படுத்தி தரும். இதுபோன்ற செயல்பாடுகள் இளைய சமுதாயத்தை, பசுமையான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல ஊக்கப்படுத்தும்" என்று பதிவிட்டிருந்தார்.

சுப்ரியா சாஹூவின் இந்த அறிவிப்புக்கு தற்போது பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது.. ஆம்.. ஏராளமான பள்ளி மாணவர்கள் திரண்டு வந்து மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்களாம். இதுகுறித்து இது குறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
பூரிப்பு: அதில், பசுமை இயக்க பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில், 206 இடங்களில் உள்ள பண்ணைகளுடன், 273 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நேரடியாக அந்தந்த பண்ணைகளுக்கு வரவழைக்கப்பட்டு மரக்கன்றுகள் உருவாக்கம், நடும் முறை, வளர்ப்பு தொடர்பான பயிற்சிகள் அளிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மாவட்ட வன அலுவலர்கள் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து வருகின்றன" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சுப்ரியா சாஹூ அறிவிப்பில், பசுமை இயக்க பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில், 206 இடங்களில் உள்ள பண்ணைகளுடன், 273 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நேரடியாக அந்தந்த பண்ணைகளுக்கு வரவழைக்கப்பட்டு மரக்கன்றுகள் உருவாக்கம், நடும் முறை, வளர்ப்பு தொடர்பான பயிற்சிகள் அளிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மாவட்ட வன அலுவலர்கள் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து வருகின்றன" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications