சல்லி சல்லியாக நொறுங்கிய கனவு! நாம் தமிழர் கட்சிக்கு படுதோல்வி.. சீமானுக்கு ஷாக் தரும் எக்சிட் போல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடங்களும் கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

Lok Sabha election 2024 BJP Congress 2024 Naam tamilar Party Seeman

2024 லோக்சபா தேர்தல் நேற்றோடு நிறைவு பெற்றுள்ள நிலையில் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 இந்தியா டுடே: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

2 தந்தி டிவி கணிப்பு: தமிழகத்தில் 33 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு அடுத்தப்படியாக பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 டைம்ஸ் நவ்: திமுக 34-35 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2-3 இடங்களில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.

4 நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு: அதிமுக கூட்டணி 0 ± 2 இடங்களை வெல்லும். திமுக கூட்டணி 29 ± 5 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 10 ± 4 இடங்களை வெல்லும் என்று நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு தெரிவித்துள்ளது.

நாம் தமிழர்: 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடங்களும் கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. மேற்கண்ட கருத்து கணிப்புகள் எதிலும் மற்ற கட்சிக்கு இடங்கள் கொடுக்கப்படவில்லை.

அதாவது திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி தாண்டி வேறு கூட்டணிக்கு இடங்கள் கொடுக்கப்படவில்லை. இப்படி இருக்க நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடமும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது கணிப்பில் தெளிவாகிறது.

என்ன நடந்தது?: லோக்சபா தேர்தல் முடிவுகள் சில தினங்களில் வர உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி மீதான கவனம் அதிகரித்துள்ளது. இதற்கு பின் முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது.

கரும்பு விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த சின்னம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலை அந்த சின்னத்தின் கீழ்தான் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டது. நாம், தமிழர் கட்சியின் நிரந்தர சின்னம் ஆகிவிடும் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் நினைத்தனர்.

ஆனால் அந்த சின்னத்தை லோக்சபா தேர்தலுக்கு முன் நாம் தமிழர் இழந்தது. போதுமான வாக்கு சதவிகிதம் இல்லை . தேர்தலுக்கு முன்பே சின்னத்தை கேட்கவில்லை. முதல் ஆளாக சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை என்பதே காரணம்.

இது காலம் காலமாக இருக்கும் விதிகள். நாம் தமிழர் கட்சி இதை தவறவிட்டது பெரிய அளவில் அந்த கட்சிக்கு எதிராக மாறியது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு கொடுக்கப்பட்டது.

அந்த சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது. இதில் சில இடங்களில் அவர்களின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. கிட்டத்தட்ட 15 இடங்களில் அவர்கள் போட்டியிட, மற்ற இடங்களில் அந்த சின்னம் சுயேட்சை சின்னம் ஆனது.

சீமான் புகார்: இந்த சின்னத்தை பெற சீமான் உச்ச நீதிமன்றத்திற்கு எல்லாம் சென்று போராடினார். ஆனால் சின்னம் கிடைக்கவில்லை. ஏதாவது செய்து சின்னத்தை பெற படாதபாடு பட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகதான் சின்னத்தை இழக்க காரணம் என்று சீமான் கூறினார்.

போகஸ்: சின்னம் மாறி.. மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. இந்த நிலையில்தான் பாஜக தனியாக எடுக்கும் வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு சதவிகிதத்தை எடுக்கும். அப்படி எடுக்கவில்லை என்றால் கட்சியை கலைத்துவிடுவேன் என்று சீமான் சவால் விடும் அளவிற்கு நாம் தமிழர் கட்சி நம்பிக்கையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தமிழர் கட்சி மீது போகஸ் சென்றுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+