தமிழகத்தில் SIR படிவங்களை பூர்த்தி செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! கடைசி நாள் எப்போது?
சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் (SIR) படிவங்களை சமர்ப்பிக்க வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கடைசி நாள் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது 2ஆவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 6,41,14,58 வாக்காளர்களில் இதுவரை 6,41,10,380 கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.
பதிவேற்றப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் முகவரி மாறியவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளவர்கள், உயிரிழந்தவர்கள், முந்தைய முகவரியில் இல்லாதவர்கள், இடம் பெயர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களை டிசம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் இன்றுடன் நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அது போல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின்னர் அவற்றின் மீது பரிசீலனைகள் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகம், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், அந்தமான் நிகோபர் ஆகிய 5 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அது போல் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும்.
டிசம்பர் 9ஆம் தேதியுடன் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கிய நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி கடைசி நாள் என நீட்டிக்கப்பட்டது. தற்போது 2ஆவது முறையாக எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் உத்தரப்பிரதேசத்திற்கு மட்டும் டிசம்பர் 26ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications