வெயில் காலம் வந்துருச்சு..கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க போறீங்களா..கண்டிப்பாக இந்த டீடெய்ல் செக் பண்ணுங்க
சென்னை : பொதுமக்கள் குளிர்பானங்களை கடைகளில் வாங்கும் பொழுது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விபரங்கள் உள்ளதா எனவும், குறிப்பாக காலாவதி நாளை சரி பார்த்தே வாங்கி உபயோகிக்க வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வழக்கத்திற்கு முன்னதாக தற்போது வெயில் காலம் ஆரம்பித்துள்ளது. பகல் நேரங்களில் அதிக வெயில் கொளுத்தி வரும் நிலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.
இதன் காரணமாக சாலைகளில் குளிபானங்கள், பழங்கள், பழச்சாறு வகைகளை விற்பனை செய்யும் கடைகள் முளைத்துள்ளன. வெளிநாட்டு குளிர்பாங்களை நாடிச்செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயந்துள்ளது.

குளிர்பானங்கள் விற்பனை
பொதுமக்கள் குளிர்பானங்களை கடைகளில் வாங்கும் பொழுது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விபரங்கள் உள்ளதா எனவும், குறிப்பாக காலாவதி நாளை சரி பார்த்தே வாங்கி உபயோகிக்க வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது. மேலும் தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

உணவு பாதுகாப்பு துறை
அதனடிப்படையில், உணவு பாதுகாப்பு துறையின் மூலம் குளிர்பானங்களின் தரம் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கடந்த பிப்ரவரி 2022-ல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட ஆய்வின்போது. 5,777 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டது. ஆய்வின் தொடர்ச்சியாக ரூபாய் 9.02 இலட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கடைகளில் எடுக்கப்பட்ட குளிர்பானங்களின் மாதிரிகள் உணவு பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. '

உரிமம் கட்டாயம்
குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து நிலைகளிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் - 2011 இல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் குளிர்பானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்னரே நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும்.

சோதிக்க வேண்டும்
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006, ஒழுங்கு முறைகள்-2011 இன் படி குளிர்பான பாட்டில்கள் மீதுள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறை உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை, லாட் / கோடு / பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு, அனுமதிக்கப்பட்ட இயற்கை நிறங்கள், அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறங்கள் குறித்த தகவல், ஊட்டச்சத்து குறித்த தகவல், சைவ மற்றும் அசைவ குறியீடு உள்ளிட்ட விபரங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

புகார் அளிக்கலாம்
மேலும், குளிர்பான பாட்டில்களில் காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்கள் குளிர்பான நிறத்திலிருந்து மாறுபட்டு, பார்த்தவுடன் தெளிவாக தெரியும் வகையில் அச்சிட குளிர்பான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பொதுமக்கள் குளிர்பானங்கள் கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விபரங்கள் உள்ளதா எனவும், குறிப்பாக காலாவதி நாளை சரி பார்த்தே வாங்கி உபயோகிக்க வேண்டும். தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற 'வாட்ஸ்அப்' எண்ணிற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications