கையெழுத்துபோட "மிரட்டினார்" ஆர்.என். ரவி.. என்எஸ்சிஎன் - ஐஎம் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
ஆர்என் ரவி மிரட்டினார் என்று புது பகீர் ஒன்றை நாகாலாந்து கட்சி கிளப்பி உள்ளது
டெல்லி: தமிழக ஆளுநர் தங்களை மிரட்டியதாக நாகாலாந்து கட்சி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது மிகுந்த பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, நாகா அமைதி பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக மத்திய அரசால்
நியமிக்கப்பட்டு இருந்தார்.
இவர் நாகலாந்து ஆளுநராக இருந்தபோது அவருக்கும், நாகலாந்துக்கு தனி உரிமை கோரும் நாகலாந்தின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐ.எம்.) அமைப்புக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது.

மிரட்டினாரா
இந்த சூழ்நிலையில்தான் ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார்... இதையடுத்து, நாகலாந்தின் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்குழு மத்தியஸ்தர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதத்தையும் அப்போதே ரவி அளித்திருந்தார்.. அதேசமயம், நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது அம்மாநில மக்களுக்கு எதிராக செயல்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் உள்ளன.
ரவிக்கு அப்போதே நாகா அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளையும் தெரிவித்தன..

திருமாவளவன்
இதனை காரணம் காட்டி அவரை தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் நினைவுகூரத்தக்கது... அதற்கேற்றவாறு, இங்கு ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, 7 தமிழர் விடுதலை தொடர்பாகவும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரியும் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.. ஆளுநரை மாற்ற வேண்டும் என்று டிஆர் பாலு உட்பட திமுக எம்பிக்கள் கோரிக்கைகளை டெல்லியில் முழங்கி வருகிறார்கள்.

அரசியல் சாசனம்
இந்நிலையில்தான் ஆளுநர் குறித்து இன்னொரு பகீர் தகவல் வெளியாகி உள்ளது.. "நாகலாந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், இந்திய அரசியல் சாசனத்தை ஏற்பதாகவும், நாகாலாந்து தனிக் கொடியையும், தனி அரசியல்சாசன கோரிக்கையை கைவிடுவதாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தங்களை மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆர்.என்.ரவி மிரட்டியதாக நாகாலாந்து தேசிய சோசியல் கட்சி (என்எஸ்சிஎன் - ஐஎம்) பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

விளைவுகள் மோசம்
தங்களுக்கு ஆர். என். ரவி கெடு விதித்து அதற்குள் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்ததாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஹாரி ட்ரூமேன் கடைப்பிடித்த கொள்கையை இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவி கடைப்பிடித்தார் என்றும் இந்தக் கட்சி கூறியுள்ளது.

மிரட்டினார்
அதாவது உன்னால் ஒருவரை சமரசப்படுத்த முடியாவிட்டால் அவரை குழப்பி விடு என்பதுதான் ட்ரூமேன் கடைப்பிடித்த கொள்கை... அதன்படியே, தன்னுடைய வழிக்கு வர என்எஸ்எசிஎன் கட்சி மறுத்து வந்ததால், நாகாலாந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினார் ரவி என்றும் அக்கட்சி ஓபனாகவே குற்றம் சாட்டியிருக்கிறது.. ஏற்கனவே தமிழகத்தில் புகைச்சல்கள் கிளம்பி உள்ள நிலையில், மறுபடியும் நாகாலாந்தில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள், ரவியை நோக்கி வந்து கொண்டிருப்பது, உற்றுநோக்க வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications