முத்து முத்தாக 5 அறிவிப்பு.. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு தந்த சர்ப்ரைஸ்.. ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து வரிசையாக பல நல்ல செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழக அரசு கடந்த சில நாட்களாக வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த 30 நாட்களில் மட்டும் ஏகப்பட்ட முக்கியமான அசத்தலான அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அரசு ஊழியர்களை கவரும் விதமாக.. அவர்ளின் பல நாள் கோரிக்கைகளை ஏற்று பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்புகள் என்னனென்ன என்று இங்கே பார்க்கலாம்.

அறிவிப்பு 1
டாஸ்மாக் விற்பனைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில் 1000 ரூபாய் எல்லா வகையான ஊழியர்களுக்கும், கூடுதல் 1000 ரூபாய் ஊழியர்களின் வேலை திறன் அடிப்படையிலும் வழங்கப்படும். இதில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் விற்ற விவகாரத்தில் சிக்கிய ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வான ரூ.1000 மட்டுமே வழங்கப்படும். திறன் அடிப்படியிலான ரூ.1000 வாங்கப்பட்டது.
இந்த ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு, டாஸ்மாக் நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைவார்கள். ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை அடுத்து, பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை டாஸ்மாக் நிர்வாகத்தின் நேர்மறையான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது ஒரு முக்கியமான அறிவிப்பாகும்.
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த முடிவு, ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு மூலம் ஊழியர்களின் பொருளாதார நிலை மேம்படும். மேலும், ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்கவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்ட மேலாளர்களும், இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சுற்றறிக்கையில், ஊதிய உயர்வு வழங்குவதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் குறித்த நேரத்தில் ஊதியத்தை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் டாஸ்மாக் பணியாளர்களின் பணிச் சூழல் மேம்படும். மேலும், ஊழியர்களிடையே பணி ஆர்வமும் அதிகரிக்கும். இந்த அறிவிப்பு, டாஸ்மாக் மற்றும் அதன் ஊழியர்களிடையே ஒரு நேர்மறையான உறவை உருவாக்கும். ஊழியர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு, டாஸ்மாக் நிர்வாகத்தின் சிறந்த செயல்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
அறிவிப்பு 2
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வதை தவிர்க்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்னரே நடவடிக்கையை முடிக்க வேண்டும்.. அதற்கு பின் நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 3
தமிழக அரசு போக்குவரத்து கழக 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடைசியாக 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்தது.
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்குஇலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அறிவிப்பு 4
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. இந்த முறை அரசு சார்பாக 2% உயர்வு செய்யப்பட்டதால் நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும்
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அறிவிப்பு 5
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முன்பு இருந்த விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications