ரேஷன் கார்டு.. தமிழக அரசு அளித்த ஒப்புதல் தெரியுமா? 22,294 பேரை விசாரிக்க போறாங்க!
சென்னை: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பம் பெறப்பட்டதால் கடந்த ஜுலை மாதத்தில் ரேஷன் கார்டு குறைவான நபர்களுக்கே கிடைக்க உள்ளது. கடந்த மாதம் விண்ணப்பித்தவர்களில் புதிதாக 1576 ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாம். இதுதவிர விசாரணையில் 22294 விண்ணப்பங்கள் இருக்கின்றனவாம்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் திருமணம் ஆன உடன் செய்யும் முதல் வேலை தனி ரேஷன் கார்டு வாங்குவது தான். தனி ரேஷன் கார்டு இருந்தால் தான், ரேஷன் கடைகளில் விலை இல்லாமல் வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் சர்க்கரை, கோதுமை, பருப்பு, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற முடியும். ஒரு ஏழைக் குடும்பத்திற்கு கண்டிப்பாக ரேஷனில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் அந்த மாதத்தை ஓட்ட மிக முக்கியம் ஆகும்.

எனவே மக்கள் அனைவருமே ரேஷன் கார்டு வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு மட்டுமின்றி ஆண்டு தோறும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இது தவிர தற்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் வழக்கத்தை விட அதிகமானோர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர்.
இவ்வளவு நாட்களாக குடும்பத்துடன் வசித்தவர்கள் திடீரென அவசர அவசரமாக சமையல் சிலிண்டர்கள் வாங்கி தனி சமையலறையை ஏற்படுத்தி, விண்ணப்பித்தனர். ஏனெனில் தனி சமையல் அறையுடன் வசிப்பவருக்கு மட்டுமே 'ஆதார்' எண் அடிப்படையில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.
திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருவோரும் தனியாக அரிசி கார்டு கேட்டு கடந்த மாதம் விண்ணப்பித்ததால் எண்ணிக்கை விறுவிறுவென அதிகரித்தது. பொதுவாக சென்னையில் உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்களும் மற்ற மாவட்டங்களில் வட்ட வழங்கல் அதிகாரிகளும் விண்ணப்பங்களை பரிசீலித்து ரேஷன் கார்டு வழங்குகிறார்கள்.
ஆனால் கடந்த மாத இறுதி தொடங்கி இந்த மாதம் வரை மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடந்த காரணத்தால் கார்டில் இருந்து உறுப்பினர் பெயர் நீக்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேநேரம் இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே புதிய கார்டு கேட்டு 26,363 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1576 பேருக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள 22,294 விண்ணப்பங்கள் விசாரணையில் உள்ளதாகவும் 2134 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விண்ணப்பங்களில் 359 விண்ணப்பங்கள் மறு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் வழக்கம் போல் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம்,புதிய ரேஷன் கார்டு பெறுவது எளிதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications