அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்க! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.20,000 முன்பணம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.20,000 தீபாவளி முன்பணமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பல அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துதுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பாக பண்டிகை முன்பணத்தை ரூ.10,000இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறும் வசதி, குழந்தைகளின் திருமணத்திற்கான முன்பணமாக ரூ.20,000 இலிருந்து ரூ.5 லட்சம் வரை வழங்குவது போன்ற பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

அதற்கான அரசாணை ஜூன் மாதத்திலேயே வெளியிடப்பட்டது. எனினும், தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், இதற்கான நிதி ஒதுக்கீடு இதுவரை செய்யப்படாததால் ஊழியர்களும் ஆசிரியர்களும் கவலை அடைந்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீபாவளி முன்பணத்திற்காக 'களஞ்சியம்' என்ற சிறப்பு செயலி வழியாக தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், முன்பணத்தை அக்டோபர் முதல் வாரத்திலேயே பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சில துறைகளுக்கு மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்படும் நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்பணமே முக்கிய நிதி ஆதாரமாக இருக்கிறது. ஆனால் தற்போது வரை நிதித்துறை சார்பில் ரூ.10,000 என்ற பழைய தொகைக்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது," புதிய ரூ.20,000 முன்பணத்திற்கான நிதி ஒதுக்கீடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் உயர்த்தப்பட்ட முன்பணத்தை வழங்க முடியும்." என கூறியிருந்தனர்.
இந்நிலையில், அரசு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் முன்பணத்தை வழங்குவதற்கான 'பில்' தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் அரசு உத்தரவால் அனைவருக்கு தீபாவளி முன்பணம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் அக்டோபர் முதல் வாரத்திலேயே ரூ.20,000 முன்பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தீபாவளி பண்டிகை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கான முக்கிய ஆதாரமாக இந்த முன்பணம் உள்ளது. தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டிருப்பது பெரிய நிம்மதியை அளிக்கிறது. என்கின்றனர் ஆசிரியர்கள்.












Click it and Unblock the Notifications