மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.. பிளாஸ்டிக் பைகளுக்கு அதிரடி தடை.. தமிழக அரசு புது உத்தரவு!
சென்னை: 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு 2023-ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு இன்று கூறியுள்ளது.
உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளாக மக்காமல் இருந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும், இயற்கை வளங்களையும் நாசப்படுத்தி வருகிறது.

இதனால் பல்வேறு நாடுகளும் மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதித்து வருகின்றன. இந்தியாவிலும் பல மாநிலங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. பிளாஸ்டிக் பொருட்களின் தீமையை கருத்தில் கொண்ட தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 51 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30-ம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவித்தார். அதாவது 51 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கான தடை என்பது 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு 2023-ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதுவரை தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications