Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகாலாந்து அரசுக்கு 10,000 சதுர அடி நிலத்தை இலவசமாக கொடுத்த தமிழக அரசு! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகாலாந்து அரசுக்கு வேலூர் மாவட்டத்தில் 10,000 சதுர அடி நிலத்தை இலவசமாக வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

நாகாலாந்து அரசு சார்பில் வேலூர் மாவட்டத்தில் விருந்தினர் இல்லம் கட்டிக்கொள்வதற்காக தமிழக அரசு இந்த நிலத்தை கொடுத்திருக்கிறது.

நாகாலாந்து அரசு வேலூரில் எதற்கு விருந்தினர் இல்லம் கட்ட வேண்டும் அதற்கு எதற்கு தமிழக அரசு நிலம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழும். ஆனால் அதன் பின்னணியில் மனிதாபிமாணம் சேவையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சிஎம்சி

வேலூர் சிஎம்சி

வேலூரில் இயங்கி வரும் சிஎம்சி மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சிஎம்சி மருத்துவமனையை நாடி வருவதற்கு காரணம் குறைந்தக்கட்டணம். தொண்டு அடிப்படையில் அந்த மருத்துவமனை இயங்கி வருவதால் நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.

விருந்தினர் இல்லம்

விருந்தினர் இல்லம்

அந்த வகையில் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இருந்தும் பெருமளவில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குக்கு நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் அவர்கள் தங்குவதற்கு மிகுந்த சிரமப்படுவதால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் விருந்தினர் இல்லம் ஒன்று கட்டிக்கொடுக்க முடிவெடுத்தது நாகாலாந்து அரசு. இதையடுத்து நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது குறித்து தெரியப்படுத்தி நிலம் கோரியிருக்கிறார்.

 10,000 சதுர அடி நிலம்

10,000 சதுர அடி நிலம்

தமிழக அரசும் மனிதாபிமானத்தோடும், மருத்துவச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்காக தொண்டு உள்ளத்தோடும் வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள ராப்பாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தை நாகாலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியது. இதனிடையே இதற்கு நன்றி தெரிவித்து நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் இராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி


தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி இதற்கு முன்னர் நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நோயாளிகள் அதிகளவில் சிகிச்சைக்காக வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+