கொரோனா தடுப்பு பணிக்காக.. 2,100 சுகாதார பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம்.. தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக 2,100 சுகாதார பணியாளர்களை தமிழக அரசு தற்காலிகமாக நியமனம் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆட்டிப்படைத்து வருகிறது. தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
கொரோனா தொற்றை சமாளிக்க தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்தும், மத்திய அரசிடம் இருந்தும் கூடுதலாக ஆக்சிஜன் பெற்று விநியோகம் செய்யப்படுகிறது.
18 வயதினருக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக வார் ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் முன்கள பணியாளர்களான சுகாதார பணியாளர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக 2,100 சுகாதார பணியாளர்களை தற்காலிகமாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
இந்த 2,100 சுகாதார பணியாளர்களும் 6 மாத காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2,100 சுகாதார பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் இவர்கள் தேவைக்கேற்ப பல்வேறு மாவட்டங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications