சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சமூக நீதி நாடகம்" ஆதிதிராவிடர் துறைக்கான நிதி.. பயன்படுத்தாமல் வீணடித்த திமுக.. அண்ணாமலை கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், மாணவர்கள் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலை இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக வழங்கப்படும் 33 திட்டங்களில் 20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் தமிழக அரசு வீணடிப்பதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள, சமூகத்தில் பின் தங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில் நூற்றுக்கணக்கானோர், ஒவ்வொரு வருடமும், எப்படியாவது சமுதாயத்தில் முன்னேறி விட வேண்டும் என்ற நோக்கத்துடன், பட்டப்படிப்பிற்காகவும், பட்ட மேற்படிப்பிற்காகவும், தலைநகர் சென்னைக்கு வருகிறார்கள்.

தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறையால் நடத்தப்படும். மாணவர் விடுதிகளில், அந்த மாணவர்கள், அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் விடுதிக் கூரை, மழைக்காலங்களில் ஒழுகுவதாகவும், சரியான குடிநீர் கிடைக்காமலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் நெளிவதாகவும் விடுதி மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

எக்சிட் 'தலை’.. கூட்டணி தொடர எடப்பாடி விதித்த 'ஒரே’ நிபந்தனை! மிரண்ட மேலிடம்..என்ன இப்படி சொல்றாங்க? எக்சிட் 'தலை’.. கூட்டணி தொடர எடப்பாடி விதித்த 'ஒரே’ நிபந்தனை! மிரண்ட மேலிடம்..என்ன இப்படி சொல்றாங்க?

மாணவர்கள் வேதனை

மாணவர்கள் வேதனை

கடந்த மழைக் காலத்தில், மழைநீர் விடுதியின் உள்ளே புகுந்ததால், மாணவர்கள் தூங்குவதற்கு இடமில்லாமலும், நோய்த் தொற்றுகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. மேலும், ஆதி திராவிடர் நலத்துறையால், விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டில், போர்வை, தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

ரூ.150 வழங்குவதில்லை

ரூ.150 வழங்குவதில்லை

இதுமட்டுமல்லாது, மாணவர்களுக்கு, மாதாமாதம் இதர செலவாக வழங்கப்பட வேண்டிய ரூ.150ம் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர் விடுதிகள் இத்தனை அலங்கோலமான நிலையில் இருக்க அரசால் வழங்கப்படுகிறது.

20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை

20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை

ஆனால் அவற்றில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக வழங்கப்படும் 33 நலத்திட்டங்களில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டு ஆதி திராவிடர் நலனுக்காக ரூ.4,099 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி, ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்துள்ளார். அதேபோல் சென்ற ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் ரூ.757 கோடி செலவிடப்பட்டுள்ளது.

விடுதிக்கு செலவிடாதது ஏன்?

விடுதிக்கு செலவிடாதது ஏன்?

ஆனால் ஆதிதிராவிடர் விடுதிக்கு செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு திறனற்ற திமுக அரசு பதில் அளிக்க வேண்டும். கல்வி, வீட்டு வசதி திட்டங்கள்ம், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படை தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாக பயன்படுத்தாமல் இருப்பது, திறனற்றி திமுக அரசின் மெத்தனத்தையும், சமுதாயத்தில் பின் தங்கி இருக்கும் மாணவர்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது. ஆனால் அரசியல் மேடைகளில் சமூக நீதி நாடகம் அரங்கேற்ருவது திமுகவின் போலி வேஷத்தையே வெளிப்படுத்துகிறது என்று விமர்சித்துள்ளார்.

English summary
State BJP President Annamalai has criticized that the students in the hostels run by the Adi Dravida Welfare Department of the Tamil Nadu government struggling for basic facilities. Annamalai has alleged that 20 projects out of 33 projects provided on behalf of the Adi Dravidar Welfare Department have not been implemented and that the Tamil Nadu government is wasting the allotted funds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X