ரோடு ஷோக்களுக்கு 3 மணி நேரம்தான் அனுமதி.. அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ரோடு ஷோ-க்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட இடத்தில் பேரணி செல்ல 10 முதல் 21 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில 500 பேருக்கு ஒரு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

Tamil Nadu Government Issues Guidelines for Political Public Meetings and Roadshows

வழிகாட்டு நெறிமுறைகள்

இதையடுத்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு அரசியல் கட்சிகளிடம் கருத்துகளை பெற்று ரோடு ஷோக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்து கோர்ட்டில் தாக்கல் செய்தது.

50 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் கூடினால்

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் அளித்த ஆலோசனைகளை பரிசீலனை செய்து நேற்றுக்குள் (ஜனவரி 05) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* வரையறுக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 முதல் 21 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
* அரசு பரிந்துரைத்த இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 முதல் 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* 50 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு 30 நாட்கள் அல்லது அதற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.

விஐபி வரும், புறப்படும் நேரம்

* ரோடு ஷோக்களுக்கு வழித்தடம் தொடங்கும் இடம் முடிவடையும் இடம், பேசும் இடத்தை விண்ணப்பத்தில் குறிப்பிடுவது கட்டாயம்.
* ரோடு ஷோ தொடங்கும், முடியும் இடத்திற்கு விஐபி வரும், புறப்படும் நேரத்தை தெளிவாக விண்ணப்பத்தில் குறிப்பிடுவது கட்டாயம்.
* ரோடு ஷோ நடக்கும் சாலை, விஐபி பேசும் இடத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவது கட்டாயம்.

3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்

* நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே ரோடு ஷோ நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும்.
* மக்கள் பாதுகாப்பு, கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் முற்றிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு ஆகும்.
* அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மிஞ்சினால் கூட்டத்தை ஏற்பாட்டாளர்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

* நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த இடத்தை சுத்தப்படுத்தி பழைய நிலையில் வழங்க வேண்டியது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு.
* நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை வாகனங்கள் எளிதாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
* ரோடு ஷோக்களுக்கு 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
* எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட 50 சதவீதம் கூடுதலாக கூட்டம் இருந்தால் விதிமீறலாக கருதப்படும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+