Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில்.. மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகள் தளர்வு? விரைவில் வருது தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்கிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை, மயானங்களில், உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டால், அதற்கு பிறகு 14 வருடங்கள் கழித்தே அந்த உடலை தோண்டி எடுத்து, அதில் இன்னொரு உடலை மறு அடக்கம் செய்யும் நடைமுறை உள்ளது.

Tamil Nadu Government likely to relax norms for Reburial in Chennai cemeteries for overcrowding

உடல் அடக்கம்: ஆனால், பெரும்பாலானவர்கள், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துவிட்டு, அதில் கல்லறையும் கட்டுகிறார்கள். இதன்காரணமாக, மயானங்களில் இறந்தவர்களை புதைக்க இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது...

இதையடுத்து, தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், நகர்ப்புற மயானங்களில் போதிய இடவசதி இல்லாத பிரச்சினை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

மயானங்கள்: அதேபோல, மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இடநெருக்கடி இருப்பதாக அதிகாரிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், 426 சதுர கிமீ பரப்பளவுள்ள சென்னை மாநகராட்சியில் உள்ள 208 புதைகுழிகளில் சில இடங்களில் அடக்கம் செய்ய இடமில்லை என்பது உட்பட பல்வேறு விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

கூட்ட முடிவில், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மயானங்களில் இடநெருக்கடியை போக்க விதிமுறைகள் தளர்த்தப்படவும் முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி, ஒரு உடலை தோண்டி எடுத்துவிட்டு, இன்னொரு உடலை மறு அடக்கம் செய்வதற்கான நடைமுறையை 14 ஆண்டுகளில் இருந்து, ஒரு வருடமாக குறைக்கவும் வாய்ப்பு உள்ளதாம்..

அதுமட்டுமல்ல, பெரிதாக கட்டப்பட்டிருக்கும் கல்லறையை சுற்றி கட்டியுள்ள இடங்களை, சிறியதாக மாற்றவும் அவர்களின் உறவினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட உள்ளதாம்.. இதனால், மயானங்களில் இடவசதி கூடுதலாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.

புதிய நடைமுறை: கேரளா, மும்பை ஆகிய மாநிலங்களில் மயானங்களில் ஒரு வருடத்திலேயே மறு அடக்கம் செய்யப்பட்டு வரும்நிலையில், இதே நடைமுறை, விரைவில் சென்னையிலும் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள். எனினும், பல்வேறு மத சமூகத்தினரிடம் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல், இப்போதுள்ள நிபந்தனைகளை தளர்த்தும் முடிவை அவசர அவசரமாக எடுக்கக்கூடாது என்றும் கருத்துக்கள் கிளம்பி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+