தீபாவளி படங்களுக்கு சிக்கல்? முதல் நாள் சிறப்புக் காட்சிகளே கூடாது! சண்டைக்கு வரும் தவாக வேல்முருகன்
சென்னை: திரையரங்குகளில் முதல் நாள் சிறப்புக் காட்சிகள், உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் எனவும், இது நேரடியாக பொதுமக்களின் வாழ்க்கையில் சுமையையும், ஒழுங்கின்மையையும் உருவாக்குகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திரையரங்குகளில் நடைபெறும் முதல் நாள் சிறப்புக் காட்சிகள் குறித்து தீவிர கவலை கொள்கிறது.
பண்டிகை நாட்களில் அல்லது புதியத் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில், அதிகாலை, காலை, சிறப்புக் காட்சிகள் எனப்படும் தனிக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது நேரடியாக பொதுமக்களின் வாழ்க்கையில் சுமையையும், ஒழுங்கின்மையையும் உருவாக்குகிறது.

ஏன் சிறப்புக் காட்சிகள் இரத்து செய்யப்பட வேண்டும்?
1.அரசு நிர்ணயித்த காட்சி நேரம் மாற்றி அமைக்கப்படுவதோடு, டிக்கெட்டுகளின் விலையும் விதிகளை மீறி விற்கப்படுகின்றன.
2.சட்ட ஒழுங்கு சீர்குலைவு , அதிகாலைக் காட்சிகளால் கூட்ட நெரிசல், சண்டை, போக்குவரத்து தடங்கல் மற்றும் விபத்துகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
3.மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, பள்ளிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை தவிர்க்கும் நிலையும் உள்ளது.
4.சமூகத்துக்கு தீங்கையும், பொதுமக்களுக்கு அன்றாட பயணத்தில் சிரமத்தையும், குடும்பங்களுக்குப் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்துகிறது.
சிறப்பு காட்சிகள் என்ற பெயரில், சமூகச் சீர்கேடுகளை அனுமதிக்க முடியாது.
எனவே,
தமிழக அரசு உடனடியாக முதல் நாள் சிறப்புக் காட்சிகளை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த காட்சி நேரங்கள் மற்றும் டிக்கெட் விலை, கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்களின் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
திரைப்படம் கலை அனுபவமாக இருக்க வேண்டும். அது சில தனியாரின் இலாபத்திற்காக, மக்களின் மீது திணிக்கப்பட்ட சுமையாக மாறக் கூடாது. எனவே, முதல் நாள் சிறப்புக் காட்சிகளை உடனடியாக இரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது." என கூறியுள்ளார்.
-
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம் -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி












Click it and Unblock the Notifications