சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பல ஆண்டு கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு! ஆதரவற்ற நலிவுற்ற, கைம்பெண்கள் நலவாரியம் அமைப்பு! அரசாணை வெளியீடு!

Google Oneindia Tamil News

சென்னை : கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதை உறுதி செய்ய தனி நலவாரியம் அமைக்கப்படும் என கடந்தாண்டு சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Tamil Nadu Government Ordinance to form a separate welfare board for weak and destitute and Abandoned Women

கடந்த சட்டமன்ற தேர்தலில் போது முதல்வர் அறிவித்ததுபோல, கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்க வேண்டும். கணவரை இழந்தவர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

வீடு கட்டும் திட்டங்களில் கூடுதல் நிதி வழங்க வேண்டுமென பல்வேறு மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனையடுத்து கைம்பெண் மகளிர் நலவாரியம் அமைக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சட்டபேரவை கூட்டத்தொடரில் பேசிய அவர்," தமிழ்நாட்டில் முதியோர் நலன் காக்கும் வகையில் மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை வகுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் சமூக நலத்துறை வாரியம் கலைக்கப்பட்டு, கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் என பெயர் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது என்பதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

 மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து- பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து- பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

இந்த வாரியத்தின் மூலம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற, நலிவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் பிரச்சனைகளை களைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது." என கூறப்பட்டுள்ளது.

English summary
After social welfare and women's rights minister Geetha Jeevan announced in the Legislative Assembly last year that a separate welfare committee will be set up to ensure that women abandoned by their husbands, weak and helpless women live in a safe manner, now the Tamil Nadu government has issued an ordinance for this purpose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X