சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

9 பேருக்கு பாதிப்பு.. தமிழகத்தில் கரும்பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிப்பு.. சுகாதாரத்துறை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது, இதனால் தமிழகத்தில் இந்த நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் அதிகரிக்கும் Black Fungus.. அறிவிக்கப்பட வேண்டிய நோய் பட்டியலில் சேர்த்த TN Government

    கொரோனா பாதிப்பு அடைந்த நோயாளிகள் பலருக்கு இந்தியாவில் கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்பட தொடங்கி உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் சிலருக்கும் இந்தியாவில் பிளாக் பங்கஸ் எனப்படும் மியூக்கர்மைக்கோசிஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    மீண்டும் படைகளை குவிக்கும் சீனா.. கிழக்கு லடாக்கில் பதற்றம்.. பதிலுக்கு படைகளை களமிறக்கிய இந்தியா! மீண்டும் படைகளை குவிக்கும் சீனா.. கிழக்கு லடாக்கில் பதற்றம்.. பதிலுக்கு படைகளை களமிறக்கிய இந்தியா!

    தீவிர கொரோனாவிற்கு மருந்துகள் எடுக்கும் நபர்கள் சிலருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரங்களில் இந்த பிளாக் பங்கஸ் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. தமிழகத்திலும் இந்த நோய் பரவ தொடங்கி உள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

    பேட்டி

    பேட்டி

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து ஆற்றிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை பல ஆண்டுகளாக இருக்க கூடிய ஒரு பாதிப்புதான்.

    பொய்

    பொய்


    கொரோனாவுக்கு பின்னர் கருப்பு பூஞ்சை கொரோனா நோய் உருவானது என்று சொல்வது பொய்யானது. கருப்பு பூஞ்சை குறித்து மக்கள் தேவையின்றி பீதியடைய கூடாது. கருப்பு பூஞ்சை குறித்த வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப கூடாது. கொரோனா சிகிச்சைக்காக ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை வியாதி, ஐசியூவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்படலாம்.

    சர்க்கரை வியாதி

    சர்க்கரை வியாதி

    சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது பரவலாக ஏற்படுகிறது. கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டாலும் மருத்துவமனை நிர்வாகம் பொது சுகாதார இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும்.

    அறிகுறி

    அறிகுறி

    கருப்பு பூஞ்சை குணப்படுத்த கூடிய நோய்தான்.அறிகுறி ஏற்பட்டவுடன் மருத்துவமனையில் சேர வேண்டும். ஆரம்பத்தில் இருந்து சிகிச்சை பெற வேண்டும். கரும்பூஞ்சை ஏற்பட்ட 9 பேரில் 6 பேர் பழைய நோயாளிகள்.

    அச்சம் வேண்டாம்

    அச்சம் வேண்டாம்

    இதில் 7 பேருக்கு சர்க்கரை வியாதி. இதுவரை தமிழகத்தில் கருப்பு பூஞ்சை காரணமாக யாரும் பலியாகவில்லை. இந்த நோய்க்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கருப்பு பூஞ்சை குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம், என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

    English summary
    Tamil Nadu Government to announce Mucormycosis as notified disease as 9 people affected so far in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X