9 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி ஆணை!
சென்னை: 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்கல்வித்துறை செயலராக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரி & பதிவுத்துறை செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக இயக்குநராக மதுசூதன் ரெட்டி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
திருச்சி மாவட்ட ஆட்சியராக வெ.சரவணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், செங்கல்பட்டு மாவட்ட அட்சியராக சினேகா, மதுரை மாவட்ட ஆட்சியராக பிரவீன் குமார், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சுபபுத்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆணையர்கள் மாற்றம்
சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக கோ.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரி ஆணையராக எஸ்.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆணையராக அமித், நெல்லை ஆணையராக மோனிகா ராணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
துறை செயலர்கள் நியமனம்
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ராஜேந்திர ரத்னு சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் முதன்மைச் செயலாளர், சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குனராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ச.விஜயகுமார், நில சீர்திருத்த ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையராக இருந்த வள்ளலார், சமூக சீர்திருத்தத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித் துறை (செலவினம்) செயலாளராக இருந்த நாகராஜன் வணிக வரித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலர்
தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குனராக இருந்த பொ.சங்கர், உயர்கல்வித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி, மனிதவள மேலாண்மை துறை செயலாளர் பதவிக்கு சென்றுள்ளார். மனிதவள மேலாண்மை துறை பொறுப்பு வகித்த பிரகாஷ், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். சிஎம்டிஏ பொறுப்பு வகித்த பிரபாகர், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பும் ந.வெங்கடேஷ், நிதித் துறை சிறப்பு செயலாளராகவும், சமூக நலத் துறை ஆணையராக இருந்த லில்லி, போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சிறப்புச் செயலாளராக இருந்த கணேஷ் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சிறப்பு செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ஆட்சியராக இருந்த கிறிஸ்துதாஸ், சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ், வருவாய் பேரிடர் மேலாண் துறை கூடுதல் செயலாளராகவும், நாமக்கல் ஆட்சியர் உமா திட்ட செயலாக்கத் துறை கூடுதல் செயலாளராகவும், விருதுநகர் ஆட்சியராக இருந்த வி.ப.ஜெயசீலன் சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சங்கீதா, சமூக நலத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேரூராட்சிகள் இயக்குனராகவும், ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications