ஸ்டாலின் அடித்த சிக்ஸர்.. தமிழ்நாட்டில் பல லட்சம் பெண்களுக்கு ஜாக்பாட்.. வருகிறது சூப்பர் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பெண்களுக்கு என்று முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விரிவாக்கம் பற்றி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேலைவாய்ப்பு திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்திருப்பது, மாநில அரசுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இதன் மூலம், தமிழக அரசு செயல்படுத்தவுள்ள இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி உதவியை உலக வங்கி வழங்கும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

தமிழக அரசின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கு இந்தத் திட்டம் ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை அடைய உதவும் வகையில், இத்திட்டம் ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தத் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அவர்களின் பொருளாதார நிலையையும் மேம்படுத்த முடியும். உலக வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. குறிப்பாக, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு அவ்வப்போது நிதி உதவி அளித்து வருகிறது.

Tamil Nadu government working woman scheme gets the nod of World Bank

பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள்

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து, அவர்களை வேலைக்குத் தயார்படுத்துவதே ஆகும். அதன்படி, சுமார் ஆறு லட்சம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதுமட்டுமின்றி, தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்களுக்கு உதவும் வகையில், 18,000 பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதுடன், தங்களின் குடும்பத்திற்கும் உறுதுணையாக இருக்க முடியும். தமிழக அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் பெண்கள் தொழில் முனைவோர்களாக மாற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தத் திட்டம், தமிழ்நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பெண்கள் அதிகாரம் பெறுவதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும். மேலும், இது பெண்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பெண்களுக்கு என்று முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விரிவாக்கம் பற்றி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேலைவாய்ப்பு திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் ஜூலை 15 முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் வரை இதற்கான முகாம்கள் நடைபெறும்.

இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விதிகள் மற்றும் விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

குடும்பத் தலைவி இல்லையென்றாலும் வாய்ப்பு

ஒருவேளை குடும்பத் தலைவி இல்லாத பெண்களுக்கும் இந்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். யாருக்கும் திருமணம் ஆகவில்லை, அம்மா உயிரோடு இல்லை என்றால், வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய மூத்த பெண்ணுக்கு பணம் வழங்கப்படும். அவர் குடும்பத் தலைவி இல்லையென்றாலும், மகளிர் உரிமைத் தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்கள் தகுதியானவராக இருந்தால், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம், ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து பெற்றவர்கள் தனி ரேஷன் கார்டு வைத்திருந்தால், அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும்.

கடந்த முறை சில ஆவணங்கள் சரியாக இல்லாத காரணத்தினால் பல பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. மேலும், அரசின் வேறு நிதியுதவிகளை வங்கியில் பெற்று வரும் பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், கடந்த சில மாதங்களில் திருமணம் ஆகி குடும்பத் தலைவியான பெண்கள், ரூ.1000 உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+