2022 அரசு விடுமுறை தினங்கள் வெளியீடு.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் எத்தனை ஞாயிற்றுகிழமைகள் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்படும்.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை தினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டை போலவே அடுத்த ஆண்டிலும் 23 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu govt announces public holiday list for calendar year 2023

இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் வெ இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 22ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

tamil nadu govt announces public holiday list for calendar year 2023

அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, தெலுங்கு வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, மே தினம், ரம்ஜான், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, மிலாது நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் உழவர் தினம், மே தினம், பக்ரீத், காந்தி ஜெயந்தி, மிலாது நபி, கிறிஸ்துமஸ் என மொத்தம் 6 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+