குட்பை அதிமுக.. முன்னாள் டிஜிபி நடராஜ் தவெகவில் சேர முடிவு.. யார் இவர்? செங்கோட்டையன் மாஸ்டர் மூவ்
சென்னை: தமிழ்நாட்டின் ஓய்வு பெற்ற டிஜிபியும் , அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர் நடராஜ் விஜய்யின் தவெகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தவெக அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேசி உள்ளார். இந்த நடராஜ் யார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. மொத்தம் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அதிமுக பிளவுப்பட்டுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி தரப்பில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்த பிளவு அதிமுகவினரை வருத்தப்பட வைத்துள்ளது.
இந்நிலையில் தான் முன்னாள் டிஜிபியும், அதிமுகவின் மாஜி எம்எல்ஏவுமான ஆர் நடராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைய முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தவெக அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, ஆர் நடராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனால் அவர் இன்று அல்லது ஓரிரு நாளில் முதல்வர் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர் நடராஜ், தமிழ்நாட்டில் டிஜிபியாக பணியாற்றினார். கடந்த 2011 மார்ச் 31ம் தேதி டிஜிபி அந்தஸ்தில் தீ மற்றும் மீட்பு சேவைகள் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார். இவர் 1975வது பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தமிழ்நாடு மற்றும் மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்பில் வசிக்கிறார். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற இவர் கடந்த 2012 ஜனவரி 19ம் தேதி முதல் 2013 ஜனவரி 12ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக செயல்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 2014ம் ஆண்டில் நடராஜ் அதிமுகவில் சேர்ந்தார். 2016 சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் நடராஜ் மொத்தம் 68,176 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இவரிடம் காங்கிரஸ் கட்சியின் கராத்தே ஆர் தியாகராஜன் 53,448 வாக்குகள் பெற்று 14,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
அதன்பிறகு மீண்டும் 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆர் நடராஜ் அங்கு களமிறங்கினார். அப்போது அவர் திமுக வேட்பாளர் தா வேலுவிடம் தோற்றார். தா வேலு மொத்தம் 68,392 வாக்குகள் பெற்றிருந்தார். நடராஜ் 55,759 வாக்குகள் வாங்கி 12,633 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இந்த முறை மயிலாப்பூர் தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு வழங்கப்பட்டது. இதனால் நடராஜ்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் அவர் தவெகவில் சேரும் முடிவில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேச உள்ளார்.
-
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு!












Click it and Unblock the Notifications