“தப்பு தப்பா மந்திரம்?”.. அறநிலையத்துறையை விமர்சித்து பரவும் வீடியோ.. தமிழக அரசு விளக்கம்!
சென்னை: "அனைத்து மதத்தினவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கூறி இந்து மத சடங்குகளை சீரழிக்கும் இந்து அறநிலையத் துறை." என்று குறிப்பிட்டு தவறாக மந்திரம் ஓதும் புரோகிதரின் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது அறநிலையத்துறைக்கு எதிராக பரவும் வதந்தி என்றும், தவறாக மந்திரம் ஓதியது "கிளி ஜோசியர்" என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது. "அனைத்து மதத்தினவரும் அர்ச்சகர் ஆகலாம்; இந்து மத சடங்குகளை சீரழிக்கும் இந்து அறநிலையத் துறை" என்று குறிப்பிட்டு தவறாக மந்திரம் ஓதும் புரோகிதரின் காணொளி ஒன்று பரவி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. "இது முற்றிலும் தவறான தகவல்" என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
அதில், "ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற தை அமாவாசை சடங்கில் தவறாக மந்திரம் ஓதிய நபர் அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பயின்றவர் இல்லை. பழனி மலையடிவாரத்தில் கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தவர். அவர் பெயர் சுப்பிரமணியன்.
அக்னி தீர்த்தக் கரையில் இயங்கும் புரோகிதர் சங்கத்தினர் இவரைபோல் 20 நபர்களை அழைத்து வந்து பூணூல் அணிவித்து புரோகிதம் செய்ய வைத்துள்ளனர். இவருக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கோயில் இணை ஆணையர் விளக்கமளித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications