ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை ரூ. 6 உயர்வா? உண்மை என்ன? - தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுபற்றி தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி எனத் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு 6 விலை அதிகரித்துள்ளது என்ற செய்தி சமூகவலைதளங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தகவலை மறுத்துள்ள தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம், தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட் என்றும் இதனை தவறாக புரிந்து கொண்டு ஆவின் நிறுவனம் பச்சை நிற பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தி விட்டதாக தெரிவிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி ! கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட் ஆகும்." என்று தெரிவித்துள்ளது.
"இதில் கூடுதலாக வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு உள்ளதுடன் கொழுப்புச் சத்து: 4.5% இதரச் சத்துக்கள்: 9% SNF உயர்த்தப்பட்டு உள்ளது. கொழுப்புச் சத்து: 4.5% மற்றும் இதரச் சத்துக்கள்: 8.5% SNF கொண்ட பழைய ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்!"என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications