சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீன்பிடி தடைக்காலம்.. மீனவர்களுக்கு ரூ.5,000 நிவாரண தொகை.. தமிழக அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீனவர்களுக்கு ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மல்யுத்த வீரர் சாகர் கொலைக்குப் பின் ஹரித்வாரில் பிரபல யோகா குரு ஆசிரமத்தில் பதுங்கிய சுஷில்குமார்! மல்யுத்த வீரர் சாகர் கொலைக்குப் பின் ஹரித்வாரில் பிரபல யோகா குரு ஆசிரமத்தில் பதுங்கிய சுஷில்குமார்!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன்பிடி தடைக்காலம்

மீன்பிடி தடைக்காலம்

கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ம் நாள் அன்று தொடங்கி ஜூன் 14-ம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ம் நாளன்று தொடங்கி ஜூலை 31-ம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தடைக்கால நிவாரணம்

தடைக்கால நிவாரணம்

மீன்பிடி தடைக்காலத்தின்போது மீன்பிடி விசைப்படகுகளில், இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழு நேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழில் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீன்வர்கள் தங்கள் குடும்பத்தினை சிரமமின்றி நடத்தி செல்ல 2008-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.

ரூ.5,000 நிவாரணம்

ரூ.5,000 நிவாரணம்

தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி நடப்பாண்டிற்கு(2021-ம் ஆண்டு) 1.72 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவராணத் தொகை தலா ரூ.5000 வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86.00 கோடி நிதி ஒப்புதல் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம்,

வங்கி கணக்கில் செலுத்தப்படும்

வங்கி கணக்கில் செலுத்தப்படும்

திருவாருர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி(பகுதி) ஆகியவற்றை சேர்ந்த 25,402 பயனாளிகளும், மேற்கு கடற்கரை மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்த 25,402 பயனாளிகளும் ஆக மொத்தம் 1,72,000 பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government has announced a relief package of Rs 5,000 for fishermen as the fishing ban is in effect in the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X