Village Assistant jobs: கிராம உதவியாளர் பணி.. வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு !
சென்னை: கிராம உதவியாளர் பணிக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்னதாக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு, நேர்க்காணல்கள், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த பணிகள் நேற்று நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பணிக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான வயது 32, BC, MBC பிரிவினருக்கான வயது 39 ஆகவும், SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான வயது வரம்பு 42 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 1955 ஆம் ஆண்டு முதல் கிராம உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இவர்கள் கிராமத்தின் நன்செய், புன்செய், தரிசு, புறம்போக்கு, நத்தம் நிலங்கள் மற்றும் வீடுகள், மனைகள் குறித்த புள்ளி விவரங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். கிராமத்தில் விளையும் பயிர்களின் விவரம் என்ன? நிலவரி விவரம் என்ன? கிராமங்களில் நடக்கும் இறப்பு, பிறப்பு, விபத்து, குற்றங்கள் குறித்தும், கிராமத்தில் வசிப்பவர்களின் இதர தகவல்களையும் சேகரித்து வைத்து கிராம நிர்வாக அலுவலர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.
அதேபோல அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியம், சாதி, வருவாய், இருப்பிடம், வாரிசு சான்றிதழ்களை வருவாய்துறை வழங்கும் முன்னர் பயனாளர்களை உறுதி செய்வதும் இவர்களின் பணிதான். கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு வந்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி அதற்கான எழுத்துத் தேர்வில் நேர்காணல்கள் சான்றிதழ் சரிபார்க்க பணிகள் நடைபெற்று வந்தன.
அதன்படி மாவட்ட ரீதியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. 10ம் வகுப்பு முடித்து இருந்தால் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதேபோல உள்ளூர் அளவில் சில தகுதிகளும் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்வான நபர்கள் மாதந்தோறும் ரூ.11,000 முதல் ரூ. 35,100 வரை சம்பளம் பெறுவார்கள். விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச வயது 21 கொண்டிருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயது வரை இருக்க வேண்டும். இது அனைத்து பிரிவுகளுக்குமான வயது வரம்பாகும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொல்லப்படும். அதேபோல விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்கிறாரோ அவர் அந்த மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மட்டுமல்ல அது தமிழில் பிழையின்றி எழுதவும் வாசிக்கவும் திறன் பெற்று இருக்க வேண்டும்
தகுதியின் அடிப்படையில் நேர்க்கானல் எழுத்துத் தேர்வு நடைபெற்று வந்தன. இதனையடுத்து நேற்று திடீரென தேர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனை அடுத்து இன்று தேர்வாளர்களுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications